.
 
 
 
 
 
 

நடிகை கணவருக்கு நோட்டீஸ்

.

Friday, 13 November, 2009   11:12 AM
.
சென்னை, நவ.13:நடிகை காயத்ரி ரகுராம் விவாகரத்து கேட்டு தொடர்ந்த வழக்கில் அவரது கணவர் தீபக் சந்திரசேகருக்கு நோட்டீஸ் அனுப்ப சென்னை குடும்ப நல கோர்ட் உத்தரவிட்டுள்ளது.
.
பிரபல சினிமா நடன இயக்குனர் ரகுராமின் மகளும், நடிகையுமான காயத்ரி ரகுராம், தீபக் சந்திரசேகர் என்ற சாப்ட்வேர் என்ஜினியரை கடந்த 3 ஆண்டுகளுக்கு முன்பு திருமணம் செய்து கொண்டார்.

அமெரிக்காவில் வசித்து வந்த காயத்ரி ரகுராம் கணவருடன் ஏற்பட்ட கருத்துவேறுபாட்டால் இந்தியா திரும்பினார்.இந்த நிலையில் கணவரிடம் இருந்து விவாகரத்து கேட்டு காயத்ரி ரகுராம் சென்னை குடும்பநல கோர்ட்டில் மனு தாக்கல் செய்தார்.

இந்த மனுவை விசாரித்த சென்னை முதலாவது கூடுதல் குடும்பநல கோர்ட் தீபக் சந்திரசேகருக்கு நோட்டீஸ் அனுப்ப உத்தரவிட்டு வழக்கு விசாரணையை டிசம்பர் 23ந் தேதிக்கு தள்ளிவைத்துள்ளது.
| |

?????? :