.
 
 
 
 
 
 

மலை ரெயில் தற்காலிக நிறுத்தம்

.

Thursday, 12 November, 2009   12:39 PM
.
சென்னை, நவ. 12:மேட்டுப்பாளையம்குன்னூர்உதக மண்டலம் இடையிலான நீலகிரி மலை ரெயில் சேவை மறு உத்தரவு வரும் வரை ரத்து செய்யப்பட்டுள்ளது.
.
சமீபத்தில் பெய்த பலத்த மழை காரணமாக  இந்த ரெயில் பாதையில்  இரண்டு இடங்களில் பெரும் பாதிப்பு ஏற்பட்டுள்ளது. 40க்கும் மேற்பட்ட இடங்களில் நிலச்சரிவுகள் ஏற்பட்டி ருப்பதுடன்  15க்கும்மேற்பட்ட இடங்களில் தண்டவாளத்தின் மீது மரங்களும், பாறைகளும் விழுந்துள்ளன.

இவற்றை சரிசெய்வதில் 200க்கும் மேற்பட்ட ரெயில்வே பணியாளர்கள் ஈடுபட்டுள்ள போதிலும் பாதிப்பு ஏற்பட்டுள்ள பல்வேறு இடங்களுக்கு செல்வதற்கான வசதிகள் இல்லாமல் இருப்பது பெரும் சவாலாக உள்ளது.  மேலும் பல இடங்களில் எந்த அளவிற்கு பாதிப்பு ஏற்பட்டுள்ளது என்பதை கண்டறிவதிலும் சிக்கல்கள் ஏற்பட்டுள்ளன.

எனினும் சேலம் கோட்ட ரெயில்வே பொறியியல் குழு பாதிப்புகளை கண்டறியும் பணியில் தீவிரமாக ஈடுபட்டுள்ளனர்.பாதிக்கப்பட்ட சில பகுதிகளுக்கு சென்றுள்ள இக்குழு அங்கு ரெயில் பாதையை சீரமைக்கும் பணிகளை மேற்கொண்டுள்ளது.
| |

?????? :