.
 
 
 
 
 
 

கணவன் கண் எதிரே மனைவி பலி

.

Thursday, 05 November, 2009   03:26 PM
.
சென்னை,நவ.5:அண்ணாசாலையில் இன்று நடைபெற்ற கோர விபத்தில் கணவனுடன் பைக்கில் சென்ற மனைவி மாநகர பஸ் மோதி சம்பவ இடத்திலேயே பரிதாபமாக இறந்தார்.
.
இந்த துயர சம்பவம் குறித்து போலீஸ் தரப்பில் கூறப்படுவதாவது:

சென்னை புதுப்பேட்டையை சேர்ந்தவர் சங்கர் ஷா எல்ஐசி ஏஜெண்ட். இவர் மோட்டார் சைக்கிளில் தனது மனைவி கஸ்தூரி (வயது38), மகன் சாய் சபரி ஆகியோருடன் அண்ணா சாலை வழியாக பைக்கில் சென்று கொண்டிருந்தார்.

அப்போது கஸ்தூரி பின் இருக்கையில் அமர்ந்திருந்தார். அவரது மகன் முன்னால் அமர்ந்து இருந்தார். அண்ணாசாலை பெரியார் சிலை அருகே பைக் வந்து கொண்டிருந்தபோது, பின்னால் வந்த பிராட்வேயில் இருந்து கோயம்பேடு செல்லும் தடம் எண்.எம்.17 ஏ மாநகர பேருந்து சங்கர் ஷா பைக் மீது பயங்கர வேகத்தில் மோதியது.

இதில் பின்னால் அமர்ந்திருந்த கஸ்தூரி நிலை தடுமாறி பைக்கில் இருந்து கீழே விழுந்தார். இதில் பலத்த அடிபட்ட அவர் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார். ஆயினும் அவரது கணவரும், மகனும் அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பினார்கள். கஸ்தூரி இறந்ததை பார்த்து அவரது கணவரும், மகனும் கதறி அழுத காட்சி பார்ப்பவர்களின் மனதை நெகிழச் செய்தது.

இதுகுறித்து அண்ணா சதுக்கம் போக்குவரத்து புலனாய்வு போலீஸ் இன்ஸ்பெக்டர் சபாநந்தம் வழக்குப்பதிவு செய்து மாநகர பஸ் டிரைவர் பிரகாசம் (வயது35) என்பவரை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். கணவன் கண் எதிரே மனைவி இறந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
| |

?????? :