Advertisements




 
 
 
 
 
 

டெல்லியை தாக்குவதற்கு சதி

.

Wednesday, 04 November, 2009   11:49 AM
.

வாஷிங்டன், நவ.4:பாகிஸ்தானைச் சேர்ந்த பயங்கரவாத அமைப்பான லஷ்கர் இதொய்பா, டெல்லியில் உள்ள தேசிய பாதுகாப்பு கல்லூரியில் தாக்குதல் நடத்த திட்டமிட்டதாக அமெரிக்காவின் புலனாய்வு அமைப்பான எப்பிஐ தெரிவித்துள்ளது.

.
லஷ்கர்இதொய்பாவுக்காக இந்தியா வில் பயங்கரவாத தாக்குதல் நடத்த திட்டமிட்டிருந்ததாக கடந்த மாதம் எப்பிஐயால் சிகாகோவைச் சேர்ந்த டேவிட் கோல்மேன் ஹெட்லி மற்றும் அவரது நண்பரான கனடாவைச் சேர்ந்த டஹாவார் உசேன் ரானா ஆகிய இருவரும் கைது செய்யப்பட்டனர்.

லஷ்கர்இதொய்பாவுக்காக டெல்லியில் உள்ள தேசிய பாதுகாப்பு கல்லூரி மற்றும் டென்மார்க் நாட்டின் செய்தித்தாள் அலுவலகம் ஆகிய இரண்டிலும் இவர்கள் தாக்குதல் நடத்த திட்ட மிட்டிருந்தது எப்பிஐ விசாரணையில் தெரிய வந்தது.

சிகாகோ நீதிமன்றத்தில் உசேன் ரானாவின் ஜாமீன் மனு நேற்று விசாரணைக்கு வந்தபோது, அதற்கு எதிர்ப்பு தெரிவித்த எப்பிஐ, இத் தகவல்களை சுட்டிக்காட்டி அவரை விடுவித்தால் மக்கள் சமூகத்துக்கு பேராபத்து ஏற்படும் என்று தெரிவித்தது.

இதனையடுத்து இம்மாதம் 10ந் தேதிக்கு விசாரணை ஒத்திவைக்கப்பட்டது.உசேன் ரானா மீதான குற்றங்கள் நிரூபிக்கப்பட்டால் அவருக்கு அதிகபட்சமாக 30 ஆண்டுகள் வரை சிறைத் தண்டனை கிடைக்கும்.ரானாவின் நண்பர் ஹெட்லியின் ஜாமீன் மனு மீது அடுத்த மாதம் விசாரணை நடைபெறவுள்ளது.

இவர்கள் இருவரும் இந்தியாவிலும், டென்மார்க்கிலும் தாக்குதல் நடத்த திட்டமிட்டது. கடந்த செப்டம்பர் மாதம் 7ம் தேதி இவர்களுக்கிடையே நடைபெற்ற உரையாடல் மூலம் தெரிய வந்தது. அதனை எப்பிஐ பதிவு செய்து வைத்துள்ளது.இஸ்லாமிய மதகுருவான முகமது நபிகள் பற்றி கேலிச்சித்திரம் வெளியிட்டதால் டென்மார்க் பத்திரிகை அலுவலகம் மீது இவர்கள் தாக்குதல் நடத்த திட்டமிட்டதாக எப்பிஐ விசாரணையில் தெரிய வந்துள்ளது.

இவர்கள் இருவரும் லஷ்கர்இ தொய்பாவின் சதிவேலைகளை நிறைவேற்றும் பணியில் ஈடுபட்டதும் எப்பிஐ விசாரணையில் அம்பலமாகி உள்ளது.
| |

மற்றவை :