.
 
 
 
 
 
 

பாக். முயற்சிக்கு பிரதமர் வாழ்த்து

.

Friday, 30 October, 2009   11:54 AM
.
புதுடெல்லி, அக். 30:பயங்கரவாதத்தை எதிர் கொள்வதில் பாகிஸ்தான் வெற்றி பெற வேண்டும் என்று பிரதமர் மன்மோகன் சிங் தமது நல்விழைவை தெரிவித்துக்கொண்டுள்ளார்.
.
பிரதமர் மன்மோகன் சிங் பாகிஸ்தான் குறித்து 3வது நாளாக இன்று தொடர்ந்து கருத்து தெரிவித்துள்ளார். நமது அண்டைநாட்டில் அமைதி நிலவ வேண்டும் என்ற இந்தியாவின் நல்லெண்ணத்தை பிரதிபலிக்கும் வகையில், பல்வேறு பிரச்சனைகளில் சிக்கித் தவிக்கும் பாகிஸ்தான், பயங்கரவாதத்தை ஒழிக்கும் தனது முயற்சியில் வெற்றி பெற வேண்டும் என்று தனது நல்விழைவை பிரதமர் டாக்டர் மன்மோகன் சிங் தெரிவித்துக் கொண்டுள்ளார்.

இந்தியா மற்றும் பாகிஸ்தான் ஆகிய இருநாடுகள் மற்றும் இதர தெற்காசிய நாடுகளின் தலைவிதிகள் ஒன்றோடு ஒன்று பின்னிப்பிணைந்துள்ளன என்றும் பிரதமர் கூறியிருக்கிறார்.

"பாகிஸ்தான் பல்வேறு உள்நாட்டு பிரச்சனைகளில் சிக்கித் தவிக்கிறது. பயங்கரவாதம் அதிகரிப்பு அது சந்திக்கும் பிரச்சனைகளில் ஒன்றாகும். அவர்கள் வெற்றி பெற (பயங்கரவாதத்தை ஒழிப்பதில்) நான் வாழ்த்துகிறேன்' என்று பிரதமர் கூறியிருக்கிறார்.

புதுடெல்லியல் நடைபெற்ற இந்துஸ்தான் டைம்ஸ் தலைமைப் பண்பு மாநாட்டில் பங்கேற்றுப் பேசிய போது பிரதமர் இந்த கருத்துக்களை தெரிவித்துள்ளார்.
| |

?????? :