.
 
 
 
 
 
 

மர்மமான "ராகுலுக்கு' குறிவைத்த ஆசாமி

.

Thursday, 29 October, 2009   11:35 AM
.
வாஷிங்டன், அக்.29:பாகிஸ்தானின் தீவிரவாத இயக்கமான லஷ்கர்இதொய்பாவுக் காக இந்தியாவில் பயங்கரவாத தாக்குதல்களை நடத்த திட்டமிட்டிருந்ததாக அமெரிக்க புலனாய்வு அமைப்பான எப்பிஐயால் கைது செய்யப்பட்ட அமெரிக்க நபர், மர்மமான "ராகுல்' என்பவருக்கு குறி வைத்ததாக தகவல்கள் வெளியாகி உள்ளன.
.
சிகாகோ நகரத்தை சேர்ந்த 49 வயதான டேவிட் கோல்மேன் ஹெட்லி என்ற அந்த நபருடன் கனடா நாட்டு பிரஜை ஒருவரும் கைது செய்யப்பட்டார்.

லஷ்கர்இதொய்பாவின் சதித் திட்டங்களை நிறைவேற்றும் நோக்கத்துடன் ஹெட்லி பலமுறை இந்தியாவுக்கு வந்து சென்றிருப்பதாக எப்பிஐ தகவல்கள் தெரிவிக்கின்றன.பயங்கரவாதத்துக்கு எதிரான நடவடிக்கையின் கீழ் இம்மாத துவக்கத்தில் சிகாகோ விமான நிலையத்தில் ஹெட்லி கைது செய்யப்பட்டார்.

சிகாகோ நீதிமன்றத்தில் எப்பிஐ தாக்கல் செய்த பிரமாணப் பத்திரத்தில், கடந்த ஜூலை மாதம் லஷ்கர்இதொய்பா தலைவர் ஒருவருக்கு ஹெட்லி அனுப்பிய ஒரு ஈமெயிலில், ""மீண்டும் நாங்கள் இந்தியா சென்றால் "ராகுலுக்கு' ஹாய் சொல்வோம்'' என்று கூறியிருப்பதாக தெரிவித்துள்ளது.

ஹெட்லி கைது செய்யப்பட்டதை தொடர்ந்து, அவர் குறிப்பிட்ட ராகுல் என்பவர் அதனை முதல் பெயராகக் கொண்ட ஒரு பிரபல இந்திய நடிகரை குறிக்கலாம் என்று புகார் ஒன்றில் எப்பிஐ தெரிவித்துள்ளது.

புதுடெல்லி உளவுத் தகவல்களோ ஹெட்லி குறிப்பிட்ட நபர், காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தியாக இருந் திருந்தால் அமெரிக்க புலனாய்வுத் துறையினர் முன்கூட்டியே இந்தியாவை எச்சரித்திருப்பார்கள் என்று தெரிவித்தனர்.

ஆனால் அத்தகைய எச்சரிக்கை விடப்படாததால் ஹெட்லி குறிப்பிட்ட "ராகுல்' என்ற நபர் யார் என்பது குறித்து தீவிர விசாரணை நடந்து வருகிறது.
| |

?????? :