.
 
 
 
 
 
 

"மர்ம காய்ச்சல் பயம் வேண்டாம்'

.

Wednesday, 28 October, 2009   03:49 PM
.
சென்னை, அக். 28:தமிழகத்தில் இப்போது பரவி வரும் மர்மக் காய்ச்சல் குறித்து பொதுமக்கள் யாரும் பீதி அடைய வேண்டாம் என சுகாதாரத் துறை முதன்மைச் செயலர் வி.கு.சுப்புராஜ் கேட்டுக்கொண்டுள்ளார்.
.
குளிர் காலத்தில் வைரஸ் மூலம் பரவும் காய்ச்சல்தான் இது. இது சாதாராண காய்ச்சல்தான். இதன் காரணமாக யாரும் இறக்கவில்லை. இறந்தவர்களுக்கு வேறு பிரச்சனைகள் இருந்துள்ளன.

இவ்வகை காய்ச்சலுக்கு அதிக கொசு உற்பத்தி தான் முக்கிய காரணம். பொதுமக்கள் தங்கள் வீட்டில் உள்ள தண்ணீர் தொட்டியை மாதத்துக்கு ஒரு முறை கழுவி வெயிலில் காய விட வேண்டும். அவ்வாறு செய்யும்போது கொசு உற்பத்தி இருக்காது.

தமிழகம் முழுவதும் கொசுக்களை ஒழிக்க ரூ.12 கோடி ஒதுக்கப்பட்டுள்ளது. ரூ.45 லட்சம் செலவில் ஐந்து கொசு மருந்துகள் தெளிக்கும் வண்டிகள் வழங்கப்பட்டுள்ளன.

தமிழகம் முழுவதும் 3 ஆயிரத்து 850 பேர் கொசு மருந்து தெளிக்கும் பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர் என்றார் அவர்.
| |

?????? :