சுற்றுலா வந்த பெண் சாவு |
||
. |
||
Friday, 23 October, 2009 11:44 AM
|
||
| . | ||
சென்னை, அக்.23: இலங்கையிலிருந்து தமிழ்நாட்டுக்கு சுற்றுலா வந்த பெண் ஒருவர் சென்னையில் பரிதாபமாக உயிரிழந்தார். |
||
| . | ||
இலங்கையை சேர்ந்தவர் அருணா பி.கே.மேரி (வயது 76). இவர் 200 பேருடன் தமிழ்நாட்டுக்கு சுற்றுலா வந்தாராம். இவர்கள் அனைவரும் எழும்பூரில் உள்ள மகாபோதி சொசைட்டி என்ற புத்தர் மடத்தில் தங்கியிருந்தனர். நேற்று பிற்பகலில் அருணா பி.கே.மேரி திடீரென மயக்கமடைந்தாராம். உடனடியாக அவரை அருகில் உள்ள தனியார் மருத்துவனை ஒன்றில் சிகிச்சைக்காக சேர்த்தனர். அங்கு சிகிச்சை பலனின்றி அவர் பரிதாபமாக உயிரிழந்தார். தகவலறிந்து எழும்பூர் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து இலங்கை பெண்ணின் உடலை பிரேத பரிசோதனைக்காக சென்னை அரசு பொது மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அவரது உடல் பிரேத பரிசோதனைக்கு பின் இலங்கைக்கு அனுப்பி வைக்கப்படும் என்று கூறப்படுகிறது. |
||
![]() |
||
மற்றவை : |
||
|
|
||























