Advertisements




 
 
 
 
 
 

பரிசுச் சீட்டு விற்ற 5 பேர் கைது

.

Friday, 23 October, 2009   10:42 AM
.

சென்னை, அக்.23:தடை செய்யப்பட்ட லாட்டரி சீட்டுக்களை விற்ற 5 பேர் கைது செய்யப்பட்டனர். அவர்களிடமிருந்து ரூ.3 லட்சம் மதிப்புள்ள லாட்டரி சீட்டுகள் பறிமுதல் செய்யப்பட்டன.
.
விருகம்பாக்கம் போலீசார் நடத்திய வாகன சோதனையில் ஈடுபட்டபோது சின்மையா நகர் பாலத்தின் அருகே நடந்து வந்த ஆர்திமுத்து (வயது 39), செல்வம் (வயது 50), ராஜாங்கம் (வயது 27) ஆகிய 5 பேரை பிடித்து சோதனை செய்தபோது அவர்களிடம் தடை செய்யப்பட்ட வெளிமாநில லாட்டரி சீட்டு இருந்தது கண்டு பிடிக்கப்பட்டது.

அவர்கள் கைது செய்யப்பட்டு ரூ.3 லட்சம் மதிப்புள்ள லாட்டரி சீட்டு பறிமுதல் செய்யப்பட்டது. மேலும் ரூ.35 ஆயிரம் ரொக்கப் பணம், 5 செல்போன் ஆகியவையும் கைப் பற்றப்பட்டன. இதில் தப்பியோடிய சக்திவேல் என்பவரை தேடி வருகின்றனர்.
| |

மற்றவை :