தொழிலாளர்க்கு தங்ககாசு பரிசு |
||
. |
||
Friday, 25 September, 2009 12:21 PM
|
||
| . | ||
சென்னை, செப். 25:தமிழ்நாடு செய்தித்தாள் நிறுவனத்தின் வெள்ளிவிழாவை யொட்டி அதில் பணியாற்றும் தொழிலாளர்களுக்கு தங்க காசு பரிசளிக்கப்படுகிறது. |
||
| . | ||
தமிழ்நாடு செய்தித்தாள் நிறுவனம் 1984ம் ஆண்டு செப்டம்பர் மாதம் தன் முதல் காகித உற்பத்தியை துவங்கியது. தற்போது, காகித உற்பத்தியில் தனது வெள்ளிவிழா ஆண்டினை கொண்டாடி வருகிறது. இதனையொட்டி, துணை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உத்தரவிற்கிணங்க தமிழ்நாடு செய்தித்தாள் காகித நிறுவனம் தனது அனைத்து நிரந்தர பணியாளர் களுக்கும் தலா 6 கிராம் தங்க காசும், அனைத்து ஒப்பந்தப் தொழிலாளர் களுக்கும் தலா 3 கிராம் தங்க காசும் வழங்கவுள்ளது. 3.10.2009 அன்று நடைபெறவுள்ள தமிழ்நாடு செய்தித்தாள் காகித நிறுவனத்தின் வெள்ளி விழாவில் துணை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பணியாளர்களுக்கு தங்க காசுகளை வழங்கி சிறப்பிப்பார். இவ்வாறு தமிழ்நாடு செய்தித்தாள் காகித நிறுவனத்தின் மேலாண்மை இயக்குனர் முகமது நசீமுத்தின் தெரிவித்துள்ளார். |
||
![]() |
||
மற்றவை : |
||
|
|
||























