.
 
 
 
 
 
 

ஐநா கவலை

.

Tuesday, 01 September, 2009   04:21 PM
.
ஐக்கியநாடுகள், செப். 1: இலங்கை ராணுவம் தமிழர்களை கொடூரமாக சுட்டுக்கொல்வதைக் காட்டும் வீடியோ காட்சிகளுக்கு ஐக்கியநாடுகள் அவை ஆழ்ந்த கவலை தெரிவித்துள்ளது.
.
மிகமோசமாக மனித உரிமைகளை மீறி,  தமிழர்கள் கொடூரமாக  சுட்டுக் கொலை செய்யப்பட்டதாக தகவல் களும், செய்திகளும் பல்வேறு தரப்பில் இருந்து வெளியாகி வருவது மிகுந்த கவலை அளிக்கிறது என்றும், இந்த கொடூர கொலைகள் போர் குற்றங்கள் என்றும் ஐ.நா. அவையின் செய்தி தொடர் பாளர் மேரி ஒகாபே தெரிவித்துள்ளார். இலங்கையில் இறுதிப்போர் நடைபெற்ற போது சிறை பிடிக்கப் பட்ட அப்பாவித் தமிழர் களையும், விடுதலைப் புலிகளையும் நிர்வாண மாக்கி, கண்களையும், கைகளையும் கட்டி சிங்கள ராணுவம் கொடூரமாக சுட்டுக் கொல்வதை காட்டும் வீடியோ படங்களை இங்கி லாந்தை சேர்ந்த "சேனல் 4' தொலைக் காட்சி அண்மையில் ஒளிபரப்பியது.

இதனை தொடர்ந்து, சிங்கள ராணுவத்திற்கு உலகம் முழுவதிலும் இருந்து கடும் கண்டனமும், எதிர்ப் புகளும் கிளம்பியுள்ளன. அத்துடன் இலங்கை அரசு மீது போர்க்குற்றங்கள் தொடர்பான நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும் என்ற கோரிக்கைகளும் வலுவடைந்துள்ளன. இந்த நிலையில், சேனல் 4 வெளியிட்ட வீடியோ காட்சிகள் குறித்து கேட்கப்பட்ட கேள்விக்கு பதில் அளித்த ஒகாபே ஆழ்ந்த கவலை தெரிவித்தார். ஆயினும் அந்த வீடியோ காட்சிகளின் உண்மை தன்மை குறித்து ஐ.நா.வால் உறுதி செய்து கொள்ள முடியவில்லை என்றும் அவர் கூறியிருக்கிறார்.

போரால் பாதிக்கப்பட்டவர்களுக்கு எடுக்கப்பட்டு வரும் நிவாரண நடவடிக்கைகள் குறித்து இலங்கை அரசாங்கத்துடன் தொடர்ந்து ஐ.நா. தொடர்பு கொண்டு வருவதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.
| |

?????? :