.
 
 
 
 
 
 

ஆயுதங்களை பெற முயன்ற புலிகள்

.

Monday, 24 August, 2009   11:42 AM
.
கொழும்பு, ஆக.24: மேலை நாடுகளில் இருந்து அணு ஆயுதங்களை விடுதலைப்புலிகள் பெற முயன்றனர் என்ற திடுக்கிடும் தகவல் தற்போது வெளியாகி உள்ளது.   இதனை கைதாகியுள்ள அந்த இயக்கத்தின் புதிய தலைவர் கே.பி. என்று அறியப்படும் செல்வராசா பத்மநாதன், தன்னிடம் விசாரணை நடத்தி வரும் இலங்கை அதிகாரி களிடம் தெரிவித்துள்ளார்.
இத்தகவலை நேஷன் என்ற வாராந்திர செய்தித்தாள் தெரிவித் துள்ளது.
.
 "அணு ஆயுதங்களை பெற முயன்ற முதல் பயங்கரவாத இயக்கம் விடுதலைப்புலிகள் இயக்கம். அந்த இயக்கம் இதில் வெற்றி பெற்றி ருந்தால் மற்ற பயங்கரவாத இயக்கங் களுக்கும் அது கிடைத்திருக்கும்' என்று தனது செய்தியில் ராணுவ வல்லுநர்களை மேற்கோள் காட்டி நேஷன் கூறியிருக்கிறது.

பல்வேறு நோக்கங்களுக்காக செல்வராசா பத்மநாதனை பல நாடுகளின் உளவுத்துறையினர் பயன்படுத்தி வந்திருப்பதாகவும், இலங்கை எதிர்க்கட்சி அரசியல் வாதிகள் சிலரும் அவருக்கு உதவி இருப்பதாகவும், கே.பி.யிடம் நடத்தப்படும் விசாரணையின் மூலம் தெரியவந்துள்ளது.

செல்வராசா பத்மநாதன் கைது செய்யப்பட்டுள்ள போதிலும் அவருக்கு அடுத்த நிலையில் உள்ள நெடியவன் என்பவர் தற்போது நார்வேயில் உள்ளார். அவரும் பயங்கரவாத நடவடிக்கைகளில் ஈடுபடக்கூடும் என்று இலங்கை அதிகாரிகள் கருதுகின்றனர் என்றும் நேஷன் இதழில் கூறப்பட்டுள்ளது. செல்வராசா பத்மநாதனிடம் இலங்கை அதிகாரிகள் தொடர்ந்து தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
| |

?????? :