Advertisements




 
 
 
 
 
 

டாக்டர் வீட்டில் நகைகள் திருட்டு

.

Wednesday, 19 August, 2009   01:01 PM
.
சென்னை, ஆக.19: சென்னை தி.நகரில் உள்ள டாக்டர் வீட்டில் மர்ம ஆசாமிகள் புகுந்து 10 பவுன் தங்க நகை, வைர மூக்குத்தி, தோடு, வளையல் ஆகியவற்றை கொள்ளை அடித்துச் சென்றுள்ளனர். அதே பகுதியில் 2 பள்ளிகளில் கொள்ளை முயற்சி நடந்துள்ளது. போலீசார் வரவே அவர்கள் தப்பி ஓடி விட்டனர்.
.
சென்னை தி.நகர் மோதிலால் தெருவில் வசிப்பவர் டாக்டர் நரசிம்மன். சென்னை மருத்துவ கல்லூரியில் பேராசிரியராக பணியாற்றி ஓய்வு பெற்றவர். அவருடைய மனைவி பெயர் வத்சலா (வயது 66).  இன்று அதிகாலை 3 மணி அளவில் வீட்டில் சத்தம் கேட்கவே இருவரும் எழுந்து பார்த்தனர். அப்போது 3 மர்ம ஆசாமிகள் வீட்டிலிருந்து வெளியே ஓடுவதை பார்த்தனர்.

வீட்டின் கிரில்லை மிஷின் வைத்து அறுத்து அவர்கள் உள்ளே புகுந்துள்ளனர். பின்னர் பீரோவை திறந்து 10 பவுன் தங்க நகைகள், 2 வைர மூக்குத்தி, 2 வைர தோடு, வைரம் பதித்த வளையல்கள் ஆகியவற்றை கொள்ளையர்கள் எடுத்துச் சென்றிருப்பது தெரிய வந்துள்ளது.  அத்துடன் வங்கி லாக்கரின் சாவியையும் அவர்கள் கொண்டு சென்றுள்ளனர்.

இது குறித்து மாம்பலம் காவல் நிலையத்தில் புகார் செய்யப்பட்டு உள்ளது. போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். நேற்று நள்ளிரவில் தி.நகர் மகாலட்சுமி தெரு, பர்கிட் சாலை ஆகிய தெருக்களில் உள்ள 2 பள்ளிகளில் புகுந்து மர்ம ஆசாமிகள் திருட முயற்சித்தனர். பள்ளி காவலாளிகள்  போலீசுக்கு தகவல் கொடுத்தனர். போலீஸ் ரோந்து வாகனம் விரைந்து வந்தது. அதைப் பார்த்ததும் கொள்ளையர்கள் தப்பி ஓடிவிட்டனர்.

பூட்டி இருந்த வீட்டில் கொள்ளை
சென்னை சவுகார்பேட்டை கிருஷணப்பட்டணம் தெருவைச் சேர்ந்தவர் மதன்சிங் (வயது 35). அவரது மனைவி பெயர் சந்தோஷ் தேவி.  மதன்சிங் குடும்பத்தோடு திருப்பதிக்கு சாமி கும்பிடுவதற்காக சென்றிருந்தார். இன்று திருப்பதியில் இருந்து திரும்பி வீட்டிற்கு சென்ற போது வீட்டில் இருந்த பீரோ திறந்து கிடப்பதை பார்த்து அதிர்ச்சி அடைந்தனர். 8 பவுன் தங்க நகைகள், வெள்ளி பொருட்கள் ஆகியவை திருடு போய் இருப்பது தெரியவந்தது. இது குறித்து யானைக்கவுனி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
| |

மற்றவை :