.
 
 
 
 
 
 

தீவிரவாதிகளை பாக். வளர்த்தது

.

Thursday, 09 July, 2009   11:26 AM
.
இஸ்லாமாபாத், ஜூலை 9: தீவிரவாதிகளை பாகிஸ்தான் உருவாக்கி வளர்த்ததை அந்நாட்டு அதிபர் ஆசிப் அலி சர்தாரி பகிரங்கமாக ஒப்புக்கொண்டுள்ளார்.
.
 இஸ்லாமாபாத்தில் கடந்த செவ்வாய்க்கிழமை இரவு அரசு ஊழியர்களிடையே அவர் பேசும்போது, "தீவிரவாதிகளும், பயங்கரவாதிகளும் தேசிய அளவில் தோன்றி அரசுக்கு சவால் விடுத் தார்கள்.  இது அரசு நிர்வாகத்தில் ஏற்பட்ட பலவீனத்தால் அல்ல. ஆனால் அவர்கள் குறுகிய கால அரசியல் நோக்கங்களுக்காக   ஒரு கொள்கையாக வேண்டும் என்றே உருவாக்கப்பட்டு வளர்க்கப்பட்டதே இதற்கு காரணம். இந்த உண்மையை  நாம் வெளிப்படையாக  ஒப்புக்கொள்ள வேண்டும்' என்று தெரிவித்தார்.

"9/11 தாக்குதல் சம்பவம் நடைபெறும் வரை இன்றைய தீவிரவாதிகள் முன்னாளில் பெரிய ஹீரோக்களாக வலம் வந்தார்கள். இப்போது அவர்கள் நம்மையும் அச்சுறுத்தி வருகிறார்கள்' என்றும் சர்தாரி கூறினார். இந்த பிரச்ச னைக்கு உரிய  நடவடிக்கைகளை  எடுக்கா விட்டால் எதிர்கால சமுதாயம் நம்மை மன்னிக்காது' என்றும் அவர் குறிப்பிட்டார்.

காஷ்மீரில் தீவிரவாதத்திற்கு பாகிஸ்தான் ஆதரவு அளித்து வருவதாக இந்தியா நீண்ட காலமாக தெரிவித்து வருகிறது. இந்த நிலையில் தற்போது அந்நாட்டு அதிபரே பகிரங்கமாக பாகிஸ்தான் அரசு தீவிரவாதிகளை உருவாக்கி வளர்த்ததாக ஒப்புக்கொண்டிருப்பது குறிப்பிடத்தக்கது.

"பயங்கரவாதத்திற்கு எதிரான போரில் முன்னணி நாடாக பாகிஸ்தான் திகழ்கிறது. இந்த கொடுமையை ஒழிக்க நான் உறுதிபூண்டிருக்கிறேன். நாட்டின் மிக சிக்கலான தருணத்தில் நான் பொறுப் பேற்றிருக்கிறேன். நாடு எதிர்நோக்கி உள்ள சவால்களை வெற்றிகரமாக எதிர்கொள்வேன்' என்றும் ஆசிப் அலி சர்தாரி தெரிவித்தார்.
| |

?????? :