Advertisements




 
 
 
 
 
 

மின் வேலியில் சிக்கி மாணவன் பலி

.

Thursday, 09 July, 2009   11:17 AM
.
சேலம், ஜூலை 9: அனுமதியின்றி தோட்டத்திற்கு அமைத்த மின்சார வேலியில் சிக்கி கல்லூரி மாணவன் பலியானார். இதனை மறைக்க கல்லூரி மாணவனின் உடலை கிணற்றில் வீசி சம்பவத்தை மறைக்க முயன்ற விவசாயி கைது செய்யப்பட்டார்.
.
சேலம் மாவட்டம் ஓமலூர் அருகே கெண்ட பெரியான்வலசு கிராமத்தைச் சேர்ந்தவர் ராஜேந்திரன். இவரது மகன் பாலாஜி (வயது 19). சேலத்தில் உள்ள பாலிடெக்னிக்கில் 2ம் ஆண்டு படித்து வந்தார். இரண்டு நாட்களுக்கு முன்னால் மாலையில் வீட்டில் இருந்து வெளியே சென்ற பாலாஜி பின்னர் வீடு திரும்பவில்லை.

இதனால் மகனை காணாமல் பெற்றோர், உறவினர் வீடு மற்றும் நண்பர்கள் வீடு என எல்லா இடத்திலும் தேடி வந்தனர். இந்தநிலையில் வீட்டின் அருகே உள்ள கிணற்றில் பாலாஜியின் உடல் மிதப்பது தெரிய வந்தது. பாலாஜியை யாராவது கொன்று கிணற்றில் வீசி இருக்கலாம் என பாலாஜியின் பெற்றோர்களுக்கு சந்தேகம் எழுந்தது.

உடனடியாக தீவட்டிப்பட்டி காவல் நிலையத் திற்கு  தகவல் தெரிவிக்கப்பட்டது. காவல் துறையினர் விரைந்து வந்து கிணற்றில் இருந்த பாலாஜியின் உடலை மீட்டனர். பாலாஜியின்  உடலில் பல இடங்களில் மின்சாரம் தாக்கியதின் சிராய்ப்பு காயம் உள்ளது தெரிந்தது.

இதனை தொடர்ந்து விசாரணையில் கிணற்றிற்கு அருகே உள்ள முள்வேலி அமைத்த தோட் டத்திற்கு சொந்தகாரரான விவசாயி முனுசாமியிடம்  விசாரணை நடத்தியதில் காட்டுபன்றி தோட்டப் பயிற்களை நாசமாக்குவதை தடுக்க மின்சாரவேலி அமைத்ததையும், அதில் மின்சாரம் பாய்ந்து இறந்த பாலாஜியை பெற்றோருக்கு பயந்து கிணற்றில் வீசியதையும் ஒத்துக் கொண்டார். மாணவன் பாலாஜி பலியாக காரணமாக இருந்த விவசாயி முனுசாமியை போலீசார் கைது செய்தனர்.
| |

மற்றவை :