.
 
 
 
 
 
 

புலிகளின் புதிய இணையதளம்

.

Saturday, 04 July, 2009   11:13 AM
.
கொழும்பு, ஜூலை 4: தமிழீழ விடுதலைப் புலிகள் அமைப்பின் அனைத்துலக உறவுகளுக்கான செயலகத்தின் அதிகாரப்பூர்வமான இணையதளம் இன்று முதல் தொடங்கவுள்ளதாக தமிழீழ விடுதலைப்புலிகள் அறிவித்திருக்கின்றனர்.
.
இதுதொடர்பாக விடுதலைப்புலிகள் இன்று வெளியிட்ட செய்திக்குறிப்பில் மேலும் தெரிவித்துள்ளதாவது:
தமிழ் மக்களின் உரிமைப் போராட்டத் தின் இன்றைய காலகட்டத்தில் தமிழீழ விடுதலைப் புலிகள் அமைப்பின் அரசியல் நிலைப்பாடுகள், அனைத் துலக உறவுகளுக்கான செயலகம் மேற்கொண்டு வரும் ராஜதந்திரப் பணிகள் போன்றவற்றை மக்களுக்கு அறியத்தருவதும், அவை தொடர்பான கருத்துக்களை மக்களுடன் பரிமாறிக் கொள்வதும் அவசியம் என எமது இயக்கம் உணர்கின்றது.

இதற்கு துணைபுரியும் வகையிலேயே தீதீதீ.டூttஞுடிணூ.ணிணூஞ் என்ற இணையத்தளம் அறிமுகப்படுத்தப்படுகின்றது.
மேலும், மக்களோடு நெருங்கித் தொடர்புகொள்ளும் நோக்குடன் தமிழீழ விடுதலைப்புலிகளின் அனைத்துலக உறவுகளுக்கான பொறுப்பாளர் செல்வராசா பத்மநாதனுக்கென பிரத்தியேகமாக "பத்மநாதன் பக்கங்கள்' எனும் ஒரு சிறப்புத் தொடர்பாடல் பகுதியும் இந்த இணைய தளத்தில் இணைக்கப் பட்டுள்ளது.   இவ்வாறு செய்திக்குறிப்பில் கூறப்பட்டுள்ளது.
| |

?????? :