ரெயிலில் வெடிகுண்டு புரளி |
||
. |
||
Wednesday, 01 July, 2009 02:55 PM
|
||
| . | ||
சென்னை, ஜூலை 1: கொல்கத்தா ரெயிலில் வெடிகுண்டு இருப்பதாக புரளி கிளப்பிய கப்பல் என்ஜினியரிங் மாணவர் கைது செய்யப்பட்டார். வெடிகுண்டு சோதனையில் அந்த ரெயில் 2 மணிநேரம் தாமதமாக புறப்பட்டு சென்றது. |
||
| . | ||
திருச்சியில் இருந்து சென்னை எழும்பூர் வழியாக ஹவுராவுக்கு செல்லும் எக்ஸ்பிரஸ் ரெயில் நேற்று இரவு 11.30 மணிக்கு சென்னை எழும்பூருக்கு வந்து பின்னர் அங்கிருந்து புறப்பட்டு சென்றது. அந்த ரெயில் வண்ணாரப்பேட்டை பென்சில் பேக்டரி அருகே வந்தபோது மெதுவாக சென்றது. அந்த ரெயிலில் இருந்து இறங்கிய ஒரு வாலிபர் அங்கிருந்த ரெயில்வே கேட்மேன் ஷேக்முகமதுவிடம் தான் பயணம் செய்த எஸ்.6 பெட்டியில் வெடிகுண்டு இருப்பதாகவும் அதை பார்த்த தான் அந்த ரெயிலில் இருந்து இறங்கி விட்டதாகவும் ரெயிலை நிறுத்தி பயணிகளை காப்பாற்றும் படியும் கூறியுள்ளார். அவரை அங்கு உட்கார வைத்த கேட்மேன் இது குறித்து சென்ட்ரல் ரெயில் நிலைய அதிகாரிகளுக்கும் கொருக்குப் பேட்டை ரெயில்வே போலீசுக்கும் போன் மூலம் தகவல் கூறியுள்ளார். ரெயில்வே போலீஸ் டிஎஸ்பி முத்தமிழ், இன்ஸ்பெக்டர் கந்தவேல் ஆகியோர் தலைமையில் வெடிகுண்டு நிபுணர்கள் மோப்ப நாய் மற்றும் உயர் அதிகாரிகள் ரெயிலை சோதனை செய்ய புறப்பட்டனர். இதற்குள் ரெயில் பொன்னேரி அருகே சென்று விட்டது. உடனடியாக தகவல் தரப்பட்டு பொன்னேரி ரெயில் நிலையத்தில் அந்த ரெயில் நிறுத்தப்பட்டது. அங்கு விரைந்து சென்ற போலீஸ் படையினர் ரெயில் பயணிகளை இறக்கி விட்டு அங்குலம் அங்குலமாக சோதனை நடத்தினர். இரண்டு மணி நேரம் நடைபெற்ற சோதனைக்கு பிறகு அது புரளி என்று தெரிய வந்தது. இதையடுத்து அதிகாலை 3.30 மணியளவில் அந்த ரெயில் புறப்பட்டு சென்றது. உடனடியாக ரெயில்வே போலீசார் வெடிகுண்டு இருப்பதாக கூறிய வாலிபரிடம் விசாரணை நடத்தினர். விசாரணையில் அவர் பெயர் யோகேஷ் (வயது 29) என்றும் சென்னை அமைந்தகரையை சேர்ந்தவர் என்பதும் தெரிய வந்தது. போலீசாரிடம் அவர் அளித்த வாக்குமூலத்தில் தான் மெரைன் என்ஜினீயரிங் படித்து முடித்து இருப்பதாகவும் அந்த சான்றிதழ் வாங்க கொல்கத்தாவுக்கு செல்ல இந்த ரெயிலில் சென்றதாகவும் எழும்பூருக்கு 10.30க்கு வர வேண்டிய ரெயில் 11.30மணிக்கு தாமதமாக வந்து புறப்பட்டதால் தான் கொல்கத்தா செல்ல தாமதமாகும் என்பதால் ஒரு வேகத்தில் இது போன்று வெடிகுண்டு இருப்பதாக கூறியதாக தெரிவித்துள்ளார். அவரை கைது செய்த ரெயில்வே போலீசார் அவர் கூறுவது உண்மையான பொய்யா? அவர் மனநிலை சரியில்லாதவரா? என்று பல கோணங்களில் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர். |
||
![]() |
||
மற்றவை : |
||
|
|
||























