கேளிக்கை வரிவிலக்கு தொடரும் |
||
. |
||
Sunday, 28 June, 2009 01:52 PM
|
||
| . | ||
சென்னை,ஜூன் 28: தமிழ் திரைப்படங்களுக்கான கேளிக்கை வரிவிலக்கு தொடரும் என முதல்வர் கருணாநிதி அறிவித் துள்ளார். "நீயின்றி நான் இல்லை' படத்தின் துவக்க விழாவில் இதனை அவர் அறிவித்தார். எஸ்.பி.முருகேசன் தயாரிப்பில் இளவேனில் இயக்கத்தில் கருணாநிதியின் கதை வசனத்தில் உருவாகும் நீயின்றி நான் இல்லை படத்தின் துவக்க விழா இன்று காலை நடைபெற்றது. நிகழ்ச்சியில் முதல்வர் கருணாநிதி கலந்து கொண்டு படப்பிடிப்பை துவக்கி வைத்தார். |
||
| . | ||
அப்போது பேசிய கருணாநிதி, திரைப்படங்களுக்கான கேளிக்கை வரிவிலக்கு தொடரும் என்று தெரிவித்தார். திரைப்படத்துறையினர் தன்னை காயப்படுத்தி விட்டதாக சிலர் கூறியதாகவும், காயப்படுத்தியவர்கள் தன்னை தேடி வருவார்கள் என்று தெரியும் என்றும் அவர் கூறினார். எதற்கும் வருத்தப்பட மாட்டேன் என்று கூறிய அவர், காயப் படுத்தினாலும் யாரையும் பழிவாங்க மாட்டேன் என்றும் தெரிவித்தார். தொடர்ந்து பேசிய அவர் கூறியதாவது: நான் எழுதிய "சுருளிமலை' எனும் நாவல் இப்போது படமாகிறது. இயக்குனர் இளவேனில் நான் எழுதும் உடன்பிறப்பு கடிதங்களை தினந்தோறும் தவறாமல் படித்து வருபவர். ஒருமுறை எதையும் தாங்கும் இதயம் வேண்டும். அண்ணாவின் குறிக்கோளை பின்பற்ற வேண்டும் என எழுதியிருந்து உன்னை நம்பி என முடித்திருந்தேன். அதனைத்தான் இந்த படத்தின் தலைப்பாக இளவேனில் வைத்திருக்கிறார். இவ்வாறு அவர் கூறினார். நிகழ்ச்சியில் நடிகர்கள் கமல்ஹாசன், விவேக், தயாரிப்பாளர் ஏ.வி.எம்.சரவணன், நடிகை மனோரமா உள்ளிட்ட பலர் கலந்து கொண்டு பேசினர். கமல்ஹாசன் பேசும் போது, சிறு வயதில் கருணாநிதியின் வசனத்தை பேசித்தான் படவாய்ப்பு தேடியதாக குறிப்பிட்டார். விவேக் பேசும்போது, இந்த படத்தின் கதை மற்றும் தனது பாத்திரம் பற்றி எதை கேட்டாலும் கலைஞரிடம் கேட்க வேண்டும் என்று கூறியதாகவும், சண்டைக் காட்சி இருக்கிறதா என்று கேட்டதற்கும் அவ்வாறே பதில் கூறியதாகவும் தெரிவித்து விட்டு, கருணாநிதி எப்போதும் ஒரு பைட்டர் என்று கூறினார். பைட்டரிடம் ரோப் இருக்கும். கருணாநிதியிடம் ஹோப் இருக்கும் என்று தெரிவித்தார். கருணாநிதி பேசும் போது சுவையான ஒரு சம்பவத்தை குறிப்பிட்டார். ஒருமுறை தன்னை காண ஒரு அம்மா வந்திருப்பதாக கூறியபோது, யார் அவர் என யோசித்தபடி வந்து பார்த்தபோது அவ்வை சண்முகியாக கமல்ஹாசன் அமர்ந்திருந்ததாகவும், அவரை பார்த்து வியந்து கட்டிப் பிடித்து முத்தம் கொடுத்ததாகவும் கூறினார். |
||
![]() |
||
மற்றவை : |
||
|
|
||























சென்னை,ஜூன் 28: தமிழ் திரைப்படங்களுக்கான கேளிக்கை வரிவிலக்கு தொடரும் என முதல்வர் கருணாநிதி அறிவித் துள்ளார். "நீயின்றி நான் இல்லை' படத்தின் துவக்க விழாவில் இதனை அவர் அறிவித்தார். எஸ்.பி.முருகேசன் தயாரிப்பில் இளவேனில் இயக்கத்தில் கருணாநிதியின் கதை வசனத்தில் உருவாகும் நீயின்றி நான் இல்லை படத்தின் துவக்க விழா இன்று காலை நடைபெற்றது. நிகழ்ச்சியில் முதல்வர் கருணாநிதி கலந்து கொண்டு படப்பிடிப்பை துவக்கி வைத்தார்.