.
 
 
 
 
 
 

சீக்கியர் மனு தள்ளுபடி

.

Wednesday, 24 June, 2009   12:16 PM
.
இஸ்லாமாபாத், ஜூன் 24: தனக்கு விதிக்கப்பட்ட தூக்கு தண்டனையை ரத்து செய்யக்கோரி இந்தியாவைச் சேர்ந்த சரப்ஜித் சிங் தாக்கல் செய்த மனுவை பாகிஸ்தான் நாட்டு உச்சநீதிமன்றம் தள்ளுபடி செய்து, தூக்கு தண்டனையை உறுதி செய்துள்ளது.
.
1990 ஆம் ஆண்டு நடந்த வெடிகுண்டு தாக்குதலில் அவருக்கு தொடர்பு இருப்பதாக கூறி பாகிஸ்தான் அரசு  குற்றம் சாட்டியது.  அவருக்கு கீழ் கோர்ட்டில் தூக்கு தண்டனை விதிக்கப்பட்டது.  தூக்கு தண்டனையை ரத்து செய்ய வேண்டும் என்று இந்தியா கேட்டு கொண்டது. 

இதனிடையே தனது  தூக்கு தண்டனையை ரத்து செய்யக்கோரி பாகிஸ்தான் உச்சநீதிமன்றத்தில் சரப்ஜித்சிங் மேல்முறையீடு செய்தார். அதனை விசாரித்த 3 நீதிபதிகள் குழுமனுவை தள்ளுபடி செய்தது.  இதன் மூலம் தூக்கு தண்டனையை கோர்ட் உறுதிசெய்துள்ளது.
| |

?????? :