Advertisements




 
 
 
 
 
 

பேராசிரியையிடம் நகை பறிப்பு

.

Friday, 19 June, 2009   11:35 AM
.
சென்னை, ஜூன் 19: கல்லூரி பேராசிரியையிடம் மோட்டார் சைக்கிளில் வந்து 9 சவரன் தங்க சங்கிலியை பறித்துச் சென்ற 2 பேரை போலீசார் தேடி வருகின்றனர்.
.
இது குறித்து போலீஸ் தரப்பில் கூறப்படுவதாவது: சென்னை சாலிக்கிராமத்தைச் சேர்ந்தவர் விஜயலட்சுமி (வயது 35). இவர் குன்றத்தூரில் உள்ள கல்லூரி ஒன்றில் பேராசிரியையாக பணியாற்றி வருகிறார்.

நேற்று கல்லூரி முடிந்த பிறகு தனது ஸ்கூட்டியில் வீட்டிற்கு வந்தார். வரும் வழியில் வளசரவாக்கத்தில் தனது தாய் வீட்டிற்கு சென்றுவிட்டு அவரை பார்த்துவிட்டு அங்கிருந்து புறப்பட்டு சாலிகிராமத்தில் உள்ள தனது வீட்டிற்கு சென்றார்.

வளரசவாக்கம் விசாலாட்சி தெரு அருகே வந்தபோது மோட்டார் சைக்கிளில் வந்த ஹெல்மெட் வந்த இரண்டு மர்ம ஆசாமிகள் விஜயலட்சுமி கழுத்தில் அணிந்திருந்த 9 பவுன் தங்க நகையை கண்ணிமைக்கும் நேரத்தில் அறுத்துக்கொண்டு தப்பிவிட்டனர். இது குறித்துஅவர் வளசரவாக்கம் போலீசில் புகார் செய்துள்ளார். இது குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
| |

மற்றவை :