.
 
 
 
 
 
 

இந்திய எம்பிக்களுக்கு பயிற்சி

.

Monday, 08 June, 2009   11:17 AM
.
வாஷிங்டன், ஜூன் 8: இந்தியாவின் இளம் நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கு அமெரிக்காவின் யேல் பல்கலைக்கழகத்தில்  பயிற்சி வகுப்புகள் நடத்தப்பட உள்ளன.  தலைமைப் பண்பு, நிர்வாகம், சர்வதேச உறவுகள் உள்ளிட்ட பல்வேறு விஷயங்கள் குறித்து அவர்களுக்கு பயிற்சி அளிக்கப்பட இருக்கிறது.
.
காங்கிரஸ் தலைவர் அபிஷேக் சிங்வி தலைமையில் செல்ல உள்ள எம்.பி.க்கள் குழுவுக்கு இம்மாதம் 21ந் தேதியில் இருந்து 26ந் தேதி வரை இதற்கான வகுப்புகள் யேல் பல்கலைக் கழகத்தில் நடத்தப்பட உள்ளன.

இந்தியாவுக்கும், யேல் பல்கலைக் கழகத்திற்கும் இடையிலான நாடாளுமன்ற தலைமைப்பண்பு திட்டத்தின் கீழ் இந்த பயிற்சி வகுப்புகள் நடத்தப் பட உள்ளன. 2007ம் ஆண்டு இந்திய தொழில் மற்றும் வர்த்தக சபை கூட்ட மைப்பான பிக்கி மற்றும் இந்திய  அமெரிக்க நாடாளுமன்ற உறுப்பினர்களின்  கூட்டமைப்பு ஆகியவை இணைந்து  இளம் தலைவர்களுக்கு பல்வேறு துறைகளில் பயிற்சி அளிப்பதற்காக இந்த திட்டத்தை தொடங்கின.

மாநிலங்களவை உறுப்பினரான அபிஷேக் சிங்வி, இந்திய  யு.எஸ். எம்.பி.க்கள் கூட்டமைப்பின்  தற்போதைய தலைவராக உள்ளார். மதச்சார்பற்ற ஜனதா தளத்தைச் சேர்ந்த கர்நாடகாவின் முன்னாள் முதலமைச்சர் எச்.டி.குமாரசாமி, முன்னாள் பிரதமர் சந்திரசேகரின் மகன் நீரஜ் சேகர்,  பிஜேபி செய்தி தொடர்பாளர் பிரகாஷ் ஜவ்தேக்கர், இமாச்சலப்பிரதேச பிஜேபி எம்.பி. அனுராக் சிங் தாக்கூர் உள்ளிட்ட இளம் எம்பிக்கள் யேல் பல்கலைக்கழ கத்திற்கு செல்லும் குழுவில் இடம் பெறுவார்கள் என்று எதிர்பார்க்கப் படுகிறது. ஆயினும் அந்தப் பட்டியல் இன்னும் இறுதி செய்யப்படவில்லை.
| |

?????? :