Advertisements




 
 
 
 
 
 

காப்பக தீவிபத்து: 29 சிசுக்கள் சாவு

.

Saturday, 06 June, 2009   12:26 PM
.
மெக்சிகோ சிட்டி, ஜூன் 6: மெக்சிகோ நாட்டில் குழந்தைகள் காப்பகத்தில் ஏற்பட்ட தீவிபத்தில் 29 சிசுக்கள் உடல் கருகி பரிதாபமாக உயிரிழந்தனர். மெக்சிகோ நாட்டில் வடமேற்கு பகுதியில் ஹெர்மோஷிலோ என்னும் நகரம் இருக்கிறது. இந்த நகரத்தில் உள்ள டயர் விற்பனை நிலையத்தில் நேற்று மாலை திடீரென தீப்பிடித்துக்கொண்டது.
.
இந்த டயர் விற்பனை நிலையத்துக்கு அருகே குழந்தைகள் காப்பகம் ஒன்று அமைந்திருந்தது. டயர் மையத்தில் ஏற்பட்ட தீ கொழுந்து விட்டெரிந்து அருகே இருந்த காப்பகத்துக்கும் பரவியது. காப்பகத்தில் தீ பயங்கரமாக எரியத் துவங்கியதால், அங்கிருந்த சிசுக்கள் தீயில் கருகி பரிதாபமாக உயிரிழந்தனர்.

3 மாதங்கள் முதல் 2 வயது வரை 29 குழந்தைகள் உயிரிழந்திருக்க லாம் என்று அஞ்சப்படுகிறது. 50க்கும் மேற்பட்ட குழந்தைகள் தீக் காயங்களோடு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

இந்த தீவிபத்து பற்றி செய்தி கேள்விப்பட்டு பெற்றோர்கள் கதறி அழுதபடி ஓடிவந்து தங்கள் குழந்தைகளை தேடி தவித்த காட்சி நெஞ்சை உலுக்குவதாக இருந்தது. இந்த கோர சம்பவம் மெக்சிகோ நாட்டையே உலுக்கியது.
| |

மற்றவை :