.
 
 
 
 
 
 

பிரிட்டிஷ் இளவரசர் ருசிகரம்

.

Monday, 01 June, 2009   11:18 AM
.
லண்டன், ஜூன் 1: ராணுவ பயிற்சி சில நேரங்களில் கடினமாக இருப்பதாகவும், இதனை எதிர்கொள்ள தனது சகோதரர் வில்லியம் உதவுவதாகவும் பிரிட்டிஷ் இளவரசர் ஹாரி கூறியுள்ளார்.
.
மறைந்த இளவரசி டயானா மற்றும் சார்லசின் இளைய மகனான ஹாரி, ராணுவத்தில் விமானியாக பயிற்சி பெற்று வருகிறார். இவரது சகோதரர் வில்லியம் ராயல் ஏர்போர்சில் மீட்பு பணி விமானியாக பயிற்சி பெற்று வருகிறார். தற்போது இருவரும் ஒன்றாக தங்கியுள்ளனர்.

இந்நிலையில் பேட்டி ஒன்றில் ஹாரி, ராணுவ பயிற்சி சில நேரங்களில் கடினமாக இருப்பதாக உணர்வதாகவும், ஆனால் தனது சகோதரர் வில்லியம் தன் சார்பாக சமையல் வேலையை கவனித்துக் கொண்டு தனக்கு உதவுவதாகவும் கூறியுள்ளார்.

ராணுவத்தை போல ராயல் ஏர்போர்ஸ் பயிற்சி அத்தனை தீவிரமானதல்ல என்பதால் வில்லியம்கிற்கு போதுமான ஓய்வு கிடைப்பதாக ஹாரி கூறியுள்ளார்.
| |

?????? :