.
 
 
 
 
 
 

லாகூர் குண்டுவெடிப்பில் 40 பேர் பலி

.

Wednesday, 27 May, 2009   01:29 PM
.
லாகூர், மே 27: பாகிஸ்தானின் லாகூர் நகரில் இன்று காலை கார் குண்டு வெடித்ததில் 40 பேர் பலியானார்கள். 150 பேர் காயமடைந்தனர்.
.
லாகூர் நகரில் நீதிமன்றம் அருகே இந்த குண்டு வெடிப்பு சம்பவம் நடைபெற்றது. காரில் வந்த தீவிரவாதிகள் இந்த குண்டை வெடிக்க செய்திருக்கலாம் என்று கருதப்படுகிறது.

காவல் துறை தலைமை அலுவலகம் இந்த இடத்தில் தான் அமைந்து இருப்பதால் தீவிரவாதிகள் காவல் துறை அலுவலகத்திற்கு குறி வைத்த தாகவும் கருதப்படுகிறது.

குண்டு வெடித்ததில் பல கட்டிடங் கள் தரைமட்டமாகின. 40க்கும் மேற்பட்டோர் பலியானார்கள். 150 பேருக்கு மேல் காயமடைந்தனர். சம்பவ இடத்தில் தீவிரவாதிகளோடு சண்டை நடைபெற்றதாகவும் தெரிகிறது.

தற்கொலைப்படை தாக்குதலாக இருக்கலாம் என்றும் அஞ்சப்படு கிறது. நிலைமையை சமாளிக்க ராணுவம்  அழைக்கப்பட்டுள்ளது.
| |

?????? :