Advertisements




 
 
 
 
 
 

சிபுசோரனின் மூத்த மகன் மரணம்

.

Thursday, 21 May, 2009   12:31 PM
.
பொக்காரோ, மே 21: ஜார்க்கண்ட் முக்தி மோர்ச்சா கட்சியின் தலைவரும், அம் மாநிலத்தின் முன்னாள் முதலமைச்சருமான  சிபுசோரனின் மூத்த மகன் துர்கா சோரன் இன்று திடீர் மரணம் அடைந்தார். சிறுநீரகம் செயலிழந்து விட்டதால் அவர் மரணமடைந்ததாக அவரது குடும்பத்தினர் தெரிவித்தனர்.  அவருக்கு வயது 39.
.
ஜார்க்கண்ட் முக்திமோர்ச்சா கட்சியின் முன்னாள் எம்.எல்.ஏ.வான அவருக்கு மனைவியும், 3 மகள்களும் உள்ளனர். அவருக்கு திடீர் உடல்நலக்குறைவு ஏற்பட்டதால்  பொக்காரோவில் உள்ள அரசு பொது மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அழைத்துச் செல்லப்பட்டார். ஆனால் அவர் வரும் வழியிலேயே இறந்துவிட்டதாக அங்கு அவரை பரிசோதித்த டாக்டர்கள் தெரிவித்தனர்.

மக்களவைத் தேர்தலில் கோட்டா தொகுதியில் போட்டியிட்டு தோல்வியடைந்த துர்கா சோரன் ஜார்க்கண்ட் முக்தி மோர்ச்சா கட்சியின் பொதுச்செயலாளர் ஆவார்.
| |

மற்றவை :