.
 
 
 
 
 
 

அகதி முகாம்களில் தமிழர்கள் துயரம்

.

Thursday, 21 May, 2009   12:29 PM
.
கொழும்பு, மே 21: இலங்கைக்கு ஐ.நா. பொதுச் செயலாளர் நாளை பயணம் செய்ய உள்ள நிலையில், வன்னிப்பகுதியில் அகதி முகாம்களில் அடைக்கப் பட்டுள்ள தமிழர்களுக்கு தேவையான உதவிகளை வழங்க மனித நேய தொண்டு  அமைப்புகளுக்கு இலங்கை அரசு பல்வேறு கட்டுப்பாடுகளையும், நிபந்தனைகளையும் விதித்து வருவதற்கு ஐக்கிய நாடுகள் சபையின் அகதிகள்  அமைப்பு ஆழ்ந்த கவலை வெளியிட்டுள்ளது.
.
விடுதலைப்புலிகளுக்கு எதிரான போர் முடிந்துவிட்டதாக இலங்கை அரசு அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது. போர் காரணமாக இடம்பெயர்ந்துள்ள  சுமார் 3 லட்சம் தமிழர்கள் வன்னிப்பகுதியில் அமைக்கப்பட்டுள்ள 41 தற்காலிக அகதி முகாம்களில் அடைக்கப்பட்டு உள்ளனர்.

இவர்கள் உணவு, மருந்து உள்ளிட்ட அத்தியாவசிய தேவைப்பொருட்கள் இல்லாமல் மிகுந்த இன்னல்களுக்கு ஆளாகி வருகின்றனர். அத்துடன் இவர்களை இலங்கை ராணுவம் பல்வேறு சித்ரவதைகள் செய்து வருவதாகவும், அவர்கள் மீண்டும் தங்கள் சொந்த ஊர்களுக்கு செல்ல அனுமதி மறுத்து வருவதாகவும் கூறப்படுகிறது.

போர்ப்பகுதியில் இருந்து வருகின்ற மக்கள் பசி, பட்டினி, ஊட்டச்சத் தின்மை போன்றவற்றால் பாதிக்கப் பட்டுள்ளனர்.
இவர்களை விசாரித்து பதிவு செய்யக்கூடிய ஓமந்தை பள்ளியில் சுகாதார நிலைமை படுமோசமாக இருப்பதாகவும் கூறப்படுகிறது.

இவற்றுக்கெல்லாம் ஐக்கிய நாடுகள் சபையின் அகதிகள் அமைப்பு ஆழ்ந்த கவலை வெளியிட்டுள்ளது. போர் முடிந்துவிட்ட நிலையில் அகதி முகாம்களில் உள்ள மக்களுக்கு ஐக்கிய நாடுகள் அகதிகள் அமைப்புக்கும், இதர  மனித நேய தொண்டு நிறுவனங்களுக்கும் பெரிய அளவில் பணிகள் காத்திருக்கின்றன என்று ஐக்கிய நாடுகள் அகதிகள் அமைப்பின் செய்தித்தொடர்பாளர் ரான்ரெட்மான்ட் தெரிவித்துள்ளார்.

தற்காலிக அகதி முகாம்களில் உள்ள மக்களுக்கு மேற்கொள்ளப்பட வேண்டிய அவசரப் பணிகள் பல உள்ளன.  இவர்களுக்கு இலங்கை அரசின் உதவியுடன் மேலும் 10 ஆயிரம் கூடுதல் முகாம்களை அமைக்கும் பணியில் ஐக்கிய நாடுகள் அகதிகள் அமைப்பு ஈடுபட்டுள்ளது என்றும் அவர் கூறினார்.

வன்னிப்பகுதியில் அகதிகள் முகாம்களில் அவதிப்பட்டு வரும் மக்களுக்கு தேவையான உதவி மற்றும் நிவாரணங்களை வழங்க மனிதநேய தொண்டு அமைப்பு களுக்கு இலங்கை அரசு பல்வேறு நிபந்தனைகளையும், கட்டுப்பாடு களையும் விதித்து வருவதற்கு அவர் ஆழ்ந்த கவலை வெளியிட்டார்.

இதனிடையே தமிழர்கள் படுகின்ற துயரம் உள்ளிட்ட பல்வேறு கள நிலைமைகளை நேரில் ஆய்வு செய்வ தற்காக ஐக்கிய நாடுகள் சபையின் பொதுச்செயலாளர் பான்கிமூன் நாளையும், நாளை மறுநாளும் இலங்கைக்கு பயணம் செய்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது.
| |

?????? :