.
 
 
 
 
 
 

அமெரிக்கா கண்டனம்

.

Thursday, 14 May, 2009   01:29 PM
.
வாஷிங்டன், மே 14: போர் பகுதியில் சிக்கி இருக்கும் அப்பாவி தமிழர்களை இலங்கை அரசு பாதுகாக்க தவறிவிட்டது என்று அமெரிக்கா கண்டனம் தெரிவித்துள்ளது. வாஷிங்டனில் தெற்காசிய பத்திரிகையாளர்களிடையே அமெரிக் காவின் துணை வெளியுறவுத்துறை அமைச்சர் ரிச்சர்ட் பவுச்சர் பேசினார். அப்போது அவர் போர்ப்பகுதியில் சிக்கியிருக்கும் அப்பாவி தமிழர்களை பாதுகாக்க இலங்கை அரசு தவறிவிட்டது என்று தெரிவித்தார்.
.
‘இலங்கை அரசு தனது வாக்குறுதியை மதித்து நடக்க வேண்டும். கனரக ஆயுதங்கள் பயன்படுத்தப்பட மாட்டாது; பாதுகாப்பு வளையப்பகுதிகளில் தாக்குதல்கள் நடத்தப்படாது; விமானங்கள் மூலம் குண்டு வீசப்படாது; பெரிய அளவில் ராணுவ நடவடிக்கைகள் கிடையாது என்று இலங்கை அரசு வாக்குறுதிகள் அளித்துள்ளது.

இவற்றை எல்லாம் அவர்கள் மதித்து நடக்க வேண்டும் என்று நாங்கள் எதிர்பார்க்கிறோம். அவ்வாறு இலங்கை அரசு நடந்துகொள்ளும் என்று நாங்கள் நம்புகிறோம்’ என்று ரிச்சர்ட் பவுச்சர் தெரிவித்தார்.

அப்பாவி தமிழர்களை பாதுகாக்கும் விஷயத்தில் இலங்கை அதிபர் ராஜபக்சே எடுத்துவரும் நடவடிக்கைகளில் கடும் அதிருப்தி வெளியிட்ட ரிச்சர்ட் பவுச்சர், ‘தாங்கள் அளித்த வாக்குறுதிகளை அவர்களே மதித்த நடக்காதது ஏமாற்றம் அளிக்கிறது’ என்றார்.’
விடுதலைப்புலிகள் தங்கள் ஆயுதங்களை ஒப்படைத்துவிட்டு சண்டை போடுவதை நிறுத்த வேண்டும் என்றும் அவர் கேட்டுக்கொண்டார்.

இலங்கை தமிழர் விவகாரத்தில் தற்போது நடந்து வரும் விஷயங்கள் குறித்து இந்தியாவிடம் தெரிவித்து இந்திய அரசுடன் ஒபாமா நிர்வாகம் நெருங்கி செயலாற்றி வருவதாகவும் பவுச்சர் கூறினார்.
| |

?????? :