.
 
 
 
 
 
 

லண்டன் தமிழர் தலைவர் குற்றவாளி

.

Saturday, 18 April, 2009   10:29 AM
.
லண்டன், ஏப்.18: தடை செய்யப்பட்ட விடுதலைப் புலிகளுக்கு வெடிகுண்டு தயாரிக்க பயன்படும் சாதனத்தை சப்ளை செய்தவழக்கில் லண்டன் தமிழர் தலைவர் ஒருவர் குற்றவாளி என்று தீர்ப்பளிக்கப்பட்டார்.
.
தெற்கு லண்டன் பகுதியை சேர்ந்த அவரது பெயர் அருணாசலம் கிரிஷாந்தகுமார் (வயது 52). பிரிட்டன் தமிழர்கள் சங்கத்தின் நிறுவனரான இவர் மீது தடை செய்யப்பட்ட விடுதலைப்புலி களுக்கு உதவியதாக பல்வேறு குற்றச்சாட்டுக்களின் கீழ் வழக்கு தொடரப்பட்டது.

இதில் புலிகளுக்கு வெடிகுண்டு தயாரிக்க பயன்படும் சாதனம் சப்ளை செய்ததாக தொடரப்பட்ட வழக்கில் நேற்று இவரை குற்றவாளி என்று இங்கிலாந்து நீதிமன்றம் நேற்று தீர்ப்பளித்தது.

ஆயினும் இவர் ஒரு விடுதலைப்புலிகள் இயக்கத்தின் உறுப்பினர் என்பது உள்ளிட்ட இவர் மீதான மேலும் மூன்று குற்றச்சாட்டுகளில் நீதிமன்றம் இன்னும் தீர்ப்பளிக்கவில்லை. மறு விசாரணை தேவையா என்பது பற்றி அடுத்த வாரம் முடிவு செய்யப் படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

சாந்தம் என்று அழைக்கப்படும் கிரிசாந்தகுமார் விடுதலைப்புலிகளுடனான தொடர்புக்காக 2004 ஆம் ஆண்டு எச்சரிக்கப்பட்டார். ஆயினும் அந்த எச்சரிக்கைக்குப் பிறகும் அவர் விடுதலைப்புலிகளுக்கு பல்வேறு வழிகளில் உதவிகளை செய்து வந்ததாக அவர் மீது குற்றம் சுமத்தப்பட்டது. இங்கிலாந்தில் வாழும் சுமார் 3 லட்சம் தமிழர்களில் பெரும்பாலோர் இலங்கை தமிழர்கள் என்பது குறிப்பிடத்தக்கது.
| |

?????? :