.
 
 
 
 
 
 

இலங்கையில் ராணுவ தாக்குதல் தீவிரம்

.

Thursday, 16 April, 2009   11:09 AM
.
கொழும்பு, ஏப். 16: முல்லைத்தீவில் மக்கள் வாழும் பாதுகாப்பு வளைய பகுதியில் இன்றும் இலங்கை ராணுவமும், விமானப்படையும் கண்மூடித் தனமாக குண்டுகளை வீசி கொடூரத் தாக்குதல்களை நடத்தின.
.
விடுதலைப்புலிகளுக்கு எதிராக 2 நாட்களுக்கு நிறுத்தி வைக்கப்பட்ட ராணுவ நடவடிக்கைகள் நேற்று முன்தினத்துடன் முடிவடைந்ததை தொடர்ந்து சண்டையை மீண்டும் முழுவீச்சில் தொடங்கியுள்ளது இலங்கை ராணுவம்.
இதனால் முல்லைத்தீவில் பாதுகாப்பு வளைய பகுதியில் ராணுவம் நேற்று நடத்திய கண்மூடித்தனமான தாக்குதல் களில் ஒரேநாளில் பெண்கள், குழந்தைகள் உள்ளிட்ட நூற்றுக்கும் மேற்பட்ட  தமிழர்கள்  படுகொலை செய்யப்பட்டனர். 

கவச வாகனங்கள், பீரங்கிகள் உள்ளிட்ட படைசாதனங்களுடன் பாதுகாப்பு வளைய பகுதியை இலங்கை ராணுவம் சுற்றிவளைத் துள்ளது. அத்துடன் விமானப்படை மூலமும், மக்கள் வாழும் இடங்கள் மீது குண்டுகளை வீசி வெறித் தாக்குதல்கள் நடத்தப்படுகின்றன. இதனால் பாதுகாப்பு வளைய பகுதியே போர்க்களமாக மாறிவிட்டது.

இந்தநிலையில் இன்றும் பாதுகாப்பு வளையபகுதியில் உள்ள முள்ளிவாய்க்கால் என்ற இடத்தில் இலங்கை ராணுவமும், இலங்கை விமானப்படையும் குண்டுகளை வீசி கொடூர தாக்குதல்களை நடத்தின. இங்குள்ள விடுதலைப்புலிகளின் அரண்களை தாக்கி அழிப்பதற்காக  இந்த தாக்குதல்கள் நடத்தப் படுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

தொலைதூர பீரங்கிகளை கொண்டு  முள்ளிவாய்க்காலில் உள்ள மக்கள் குடியிருப்புகள் மீது விமானப்படை விமானங்கள் குண்டுகளை வீசி கண்மூடித்தனமான தாக்குதல்களை நடத்தின.  எனவே உயிருக்கு அஞ்சி அங்கு வாழும் ஏராளமான மக்கள் இரண்டாவது நாளாக இன்றும் பதுங்கு குழிகளிலேயே தங்கியிருந்தனர்.

ராணுவம் நடத்திய தாக்குதலில் இன்றும் ஏராளமான தமிழர்கள் பலியாகியிருக்கலாம் என்று அஞ்சப் படுகிறது.  உயிரிழப்பு விவரங்கள் உடனடியாக தெரியவில்லை.
| |

?????? :