Advertisements




 
 
 
 
 
 

ஐ.நா. அதிகாரிகளுடன் புலிகள் பேச்சு

.

Saturday, 11 April, 2009   11:44 AM
.
கொழும்பு, ஏப்.11: ஐநா அதிகாரிகளுடன்  முல்லைத் தீவில் உள்ள விடுதலைப் புலிகளின் தலைவர்கள் தொடர்பு கொண்டு பேசி உள்ளதாக இலங்கை அரசு தெரிவித்துள்ளது.
.
இலங்கையில் போரை நிறுத்த வேண்டும் என்று சர்வதேச சமுதாயம் வலியுறுத்தி வருகிறது. இந்த நிலையில் சர்வதேச விவகாரங் களுக்கான நார்வே அமைச்சர் எரிக் சோல்ஹேம், முல்லைத்தீவில் உள்ள விடுதலைப்புலிகளின் தலைவர்கள் ஐநா அதிகாரிகளுடன் நெருங்கிய  தொடர்பு கொண்டுள்ளனர் என்று தெரிவித்திருப்பதாக செய்திகள் வந்துள்ளன என்று இலங்கை அதிபர் செயலகம் அறிக்கை ஒன்றில் நேற்று தெரிவித்துள்ளது.

போரை நிறுத்த வேண்டும் என்று நார்வே நாடாளுமன்றம் அருகே ஆர்ப்பாட்டம் நடத்திய தமிழர் பிரதிநிதிகளுடன் பேசிய போது புலிகளின் தலைவர்களுடன் ஐக்கிய நாட்டு சபை தொடர்பு கொண்டு வருவதாக எரிக் சோல்ஹேம் தெரிவித்துள்ளார்.
ஐக்கிய நாடுகள் அதிகாரிக்கும், முல்லைத்தீவில் பாதுகாப்பு வளையப்பகுதியில் உள்ள புலிகளின் தலைவர்களுக்கும் இடையே தொலைத்தொடர்பு ஏற்படுத்திக் கொடுத்த நார்வேயின் செயலுக்கு இலங்கை அரசு அதிருப்தி தெரிவித்துள்ளது.

இதனிடையே, எரிக் சோல்ஹேம் புலிகளின் அரசியல் பிரிவு தலைவர் நடேசனிடம் இம்மாதம் 1ம் தேதி தொடர்பு கொண்டு 30 நிமிடநேரம் பேசியதாக புலிகளின் ஆதரவு இணைய தளம் தமிழ்நெட் தெரிவித்துள்ளது.

அப்போது இலங்கை போரால் சர்வதேச அளவில் ஏற்பட்டுள்ள தாக்கங்கள் குறித்து அதிலும் குறிப்பாக ஐநா பாதுகாப்பு கவுன்சிலில் இதுகுறித்து நடைபெற்ற ஆலோசனைகள் குறித்து நடேசனிடம் எரிக் சோல்ஹேம் விளக்கியதாக விடுதலைப் புலிகளின் அமைதி செயலக இயக்குனர் பூலித் தேவனை மேற்கோள் காட்டி அந்த இணைய தளம் செய்தி வெளியிட்டுள்ளது.
| |

மற்றவை :