போலீஸ் தேடியவர் தற்கொலை |
||
. |
||
Thursday, 09 April, 2009 12:04 PM
|
||
| . | ||
திருவள்ளூர், ஏப்.9: திருவள்ளூர் அருகே கிராமம் ஒன்றில் கொலை வழக்கில் போலீசாரால் தேடப்பட்டு வந்த ஒருவர் தற்கொலை செய்து கொண்டார். திருவள்ளூர் அருகே ராமதண்டலம் கிராமத்தில் சில தினங்களுக்கு முன்பு பாலாஜி என்ற தொழிலாளி வெட்டி கொலை செய்யப்பட்டார். |
||
| . | ||
இது குறித்து திருவள்ளூர் தாலுகா போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வந்தனர். இக் கொலை வழக்கில் முக்கிய குற்றவாளியாக கருதப்பட்ட ராம தண்டலம் கிராமத்தைச் சேர்ந்த பாண்டியன் (வயது 30) என்பவரை போலீசார் தேடி வந்தனர். பாண்டியன் டிராக்டர் டிரைவராக பணியாற்றி வந்தார். இவருக்கு அன்னம்மா என்ற மனைவியும், 3 மகள்களும், ஒரு மகனும் உள்ளனர். இந்நிலையில் இன்று அதிகாலை பாண்டியன், ராமதண்டலத்தில் உள்ள தனது மாமியார் வீட்டுக்கு அருகே உள்ள புளிய மரத்தில் தூக்கில் பிணமாக தொங்கினார். தகவல் அறிந்ததும் திருவள்ளூர் தாலுகா போலீசார் விரைந்து சென்று பாண்டியன உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக திருவள்ளூர் அரசு மருத்துவ மனைக்கு அனுப்பி வைத்தனர். நேற்று முன்தினம் விசாரணைக்காக பாண்டியனை திருவள்ளூர் தாலுகா போலீஸ் நிலையத்திற்கு போலீசார் அழைத்துச் சென்றதாகவும், அப்போது போலீசாரை ஏமாற்றி விட்டு, தப்பியோடிவிட்டதாகவும் கூறப்படுகிறது. இந்நிலையில் போலீசுக்கும், சிறைத் தண்டனைக்கும் பயந்து பாண்டியன் தற்கொலை செய்து கொண்டதாக கூறப்படுகிறது. இந்த சம்பவத்தை தொடர்ந்து ராம தண்டலம் கிராமத்தில் பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. |
||
![]() |
||
மற்றவை : |
||
|
|
||























