Advertisements




 
 
 
 
 
 

ராகுல் மீது நடவடிக்கை

.

Tuesday, 07 April, 2009   03:24 PM
.
சென்னை, ஏப்.7: அமேதி தொகுதியில் போட்டியிடும் காங்கிரஸ் வேட்பாளர் ராகுல் காந்தி, வேட்பு மனு தாக்கலின் போது  தவறான பிரமாண பத்திரம் அளித்தது தொடர்பாக  தேர்தல் ஆணையம் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று  பொதுவாழ்வில் தூய்மையை வலியுறுத்தி வரும் அரசியல் கட்சியான தேசிய பாதுகாப்பு கழகம் வலியுறுத்தி யுள்ளது.
.
இது தொடர்பாக அதன் நிறுவனரும் பொதுச்செயலாளருமான எம்.குமார் தலைமைத் தேர்தல் ஆணையர் எம்.கோபாலசுவாமிக்கு அனுப்பியுள்ள புகார் மனுவில் கூறியிருப்பதாவது:

இரண்டு தினங்களுக்கு முன்பு அமேதி மக்களவை தொகுதியின் காங்கிரஸ் வேட்பாளர் ராகுல் காந்தி வேட்பு மனு தாக்கல் செய்தார். அப்போது அவர் 1995ம் ஆண்டு இங்கிலாந்து கேம்பிரிட்ஜ் பல்கலைக் கழகத்தில் வளர்ச்சி பொருளாதாரத்தில் எம்.பில் பெற்று இருப்பதாக குறிப்பிட்டு தவறான பிரமாண பத்திரம் தாக்கல் செய்துள்ளார்.

ஆனால் 200405 கல்வியாண்டில் படித்ததற்கு 22.4.2008ந் தேதி தான் அவருக்கு சான்றிதழ் வழங்கப்பட்டு உள்ளது. அதனை மறைத்து அவர் வேண்டும் என்றே 95ம் ஆண்டே எம்.பில் முடித்ததாக தெரிவித்துள்ளார்.

அதுவும் அவர் படித்த படிப்பு, வளர்ச்சி கல்விதானே தவிர வளர்ச்சி பொருளாதாரம் அல்ல.
இவ்வாறு அவர் வேண்டுமென்றே  தவறான பிரமாண பத்திரம் தாக்கல் செய்திருப்பது தண்டனைக்குரிய குற்றமாகும்.

எனவே அவர் மீது தேர்தல் ஆணையம் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும். தேசிய பாதுகாப்பு கழகத்தின் இந்த அறிக்கையை பொதுநல மனுவாகக் கருதி தாமாகவே முன்வந்து உச்சநீதி மன்ற தலைமை நீதிபதியும்,  ராகுல்காந்தி மீது உரிய சட்ட நடவடிக்கைகளை எடுக்க வேண்டும் என்று கேட்டுக்கொள்வதாக அவர்  கூறியுள்ளார்.
| |

மற்றவை :