Advertisements




 
 
 
 
 
 

வேலை வாங்கி தருவதாக மோசடி

.

Monday, 06 April, 2009   02:43 PM
.
சென்னை, ஏப்.6: வெளிநாட்டில் வேலை வாங்கித் தருவதாக கூறி பல லட்சம் மோசடி செய்துள்ளதாக பாதிரியார் உள்ளிட்ட 3 பேர் மீது சென்னை மாநகர போலீஸ் கமிஷனரிடம் புகார் அளிக்கப்பட்டுள்ளது.
.
சென்னை எண்ணூர் பகுதியைச் சேர்ந்தவர் தேவராஜ். இவர் இன்று சென்னை மாநகர போலீஸ் கமிஷனரிடம் ஒரு புகார் கொடுத்தார். அப்புகாரில் கூறியிருப்பதாவது:

எண்ணூரில் வசித்து வரும் நான் தையல் வேலை செய்து வருகிறேன். நான் வசிக்கும் பகுதியைச் சேர்ந்த சங்கர் என்பவர் என்னிடம் தொடர்பு கொண்டு வெளிநாட்டில் தையல் வேலை செய்தால் கைநிறைய சம்பளம் கிடைக்கும் என்று  கூறினார்.

அத்துடன் அவர் என்னை சைமன் பால் என்ற பாதிரியாரிடம் அழைத்துச் சென்று அறிமுகப்படுத்தினார். பாதிரியார் சைமன்பால் என்னை ஸ்டீபன்லூயி என்பவரிடம் அழைத்துச் சென்று  வெளிநாட்டில் வேலைக்கு சேருவதற்கு ரூ.2 லட்சம் வரை செலவாகும் என்று கூறினார்கள்.

நான் அவர்களிடம் ரூ.1 லட்சத்து 74 ஆயிரம் வரை கொடுத்துள்ளேன். ஆனால் இதுவரை என்னை வெளிநாட்டிற்கு வேலைக்கு அனுப்பவில்லை. இது பற்றி கேட்டபோது சரியான பதில்அவரிடம் இருந்து கிடைக்காததால் நான் கொடுத்த பணத்தை திருப்பி கேட்டபோது, பணம் தர முடியாது என்று பதிலளித்ததோடு என்னை மிரட்டினார்கள் என்று புகாரில் கூறியிருந்தார்.

இதேபோல் பழைய வண்ணாரப் பேட்டை சண்முகவேல், ஊரப்பாக்கம் குமார், பம்மல் லூர்துசாமி மற்றும் சாமுவேல், கணேஷ் உள்ளிட்ட 10 பேர் இந்த மூவர் மீதும் தங்களை வெளிநாட்டிற்கு வேலைக்கு அனுப்புவதாக கூறி பணம் பெற்று ஏமாற்றியதாக புகார் கூறி உள்ளனர்.

இது குறித்து நடவடிக்கை எடுக்க போலீஸ் கமிஷனர் உத்தரவிட்டுள்ளார்.
| |

மற்றவை :