பவார் பங்கேற்கவில்லை |
||
. |
||
Friday, 03 April, 2009 12:11 PM
|
||
| . | ||
மும்பை, ஏப்.3: புவனேஸ்வரில்இன்று நடைபெறும் மூன்றாவது அணியின் பேரணியில் தேசியவாத காங்கிரஸ் தலைவர் சரத்பவார் கலந்து கொள்ள முடியாத நிலைமை உருவாகி உள்ளது. அவர் செல்ல இருந்த விமானத்தில் பழுது ஏற்பட்டதே இதற்கு காரணம் என்று கூறப்படுகிறது. |
||
| . | ||
காங்கிரஸ் கூட்டணியில் அங்கம் வகிக்கும் தேசியவாத காங்கிரஸ் தலைவர் சரத்பவார் திடீரென்று ஒரு சர்ச்சையில் சிக்கியிருக்கிறார். இன்று ஒரிசா மாநிலம் புவனேஸ்வரில் நடைபெறவிருக்கும் 3-வதுஅணியின் பேரணியில் அவர் கலந்து கொள்வார் என்று அறிவிக்கப் பட்டிருந்தது. இது காங்கிரஸ் கட்சியை ஆத்திரமடைய செய்துள்ளது. கூட்டணியில் இருந்து கொண்டே மூன்றாவது அணி நிகழ்ச்சியில் பங்கேற்பது துரோகச் செயல் என்று காங்கிரஸ் தலைவர்கள் குற்றம் சாட்டியிருந்தார்கள். இந்த கூட்டத்தில் கலந்து கொள் வதை பவார் தவிர்க்க வேண்டு மென்று மத்திய உள்துறை அமைச்சர் ப.சிதம்பரம் வேண்டுகோள் விடுத்திருந்தார். பவார் 3-வது அணியின் பேரணியில் பங்கேற்றால் காங்கிரஸ் கூட்டணியில் மேலும் ஒரு பிளவை ஏற்படுத்தும் என்று எதிர்பார்க்கப் பட்ட நிலையில், சரத்பவார் தனது புவனேஸ்வர் பயணத்தை திடீரென ஒத்திவைக்க நேரிட்டுள்ளது. அவர் செல்ல இருந்த விமானத்தில் பழுது ஏற்பட்டதுதான் இதற்கு காரணம் என்று கூறப்படுகிறது. இதனை கட்சியின் செய்தி தொடர்பாளர் மதன் பாஃப்னா தெரிவித்தார். விமானம் பழுதடைந்தாலும் மாற்று ஏற்பாடுகள் மூலம் அவர் புவனேஸ்வர் செல்வாரா என்ற கேள்விக்கு பாஃப்னா கருத்து தெரிவிக்க மறுத்து விட்டார். |
||
![]() |
||
மற்றவை : |
||
|
|
||























