Advertisements




 
 
 
 
 
 

13 பவுன் தங்க நகை அபேஸ்

.

Friday, 03 April, 2009   11:44 AM
.
சென்னை, ஏப்.3: வெவ்வேறு இடங்களில் நடந்த சம்பவங்களில் 2 மூதாட்டிகளிடம் 13 பவுன் தங்க சங்கிலி அபேஸ் செய்யப் பட்டது. மற்றொரு சம்பவத்தில் லாட்ஜ் அறையில் இருந்த ரூ.50 ஆயிரம் பணம் திருட்டு போனது. சென்னை பட்டாளத்தை சேர்ந்தவர் சரஸ்வதியம்மாள் (வயது 79). இவர் நேற்று அண்ணா சதுக்கத்தில் இருந்து பெரம்பூர் செல்லும் மாநகர பஸ் தடம் எண்.29ஏ பஸ்சில் பயணம் செய்தார்.
.
தான் அணிந்திருந்த 5 பவுன் தங்க சங்கிலியை பத்திரமாக இருக்க வேண்டும் என்பதற்காக கையில் இருந்த பர்சில் வைத்து இருந்தாராம். பட்டாளம் சென்று பஸ்சை விட்டு இறங்கும் போது பர்சில் இருந்த தங்க சங்கிலியை யாரோ அபேஸ் செய்து இருப்பது தெரிய வந்தது. இது குறித்து அவர் கொடுத்த புகாரின் பேரில் புளியந்தோப்பு போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

மற்றொரு சம்பவத்தில் அண்ணா நகரை சேர்ந்தவர் விஜயா (வயது 60). இவர் நேற்று அண்ணாநகரில் உள்ள பிரபல சூப்பர் மார்க்கெட் அருகே நடந்து வந்தார். அப்போது அவரை வழிமறித்த 2 பேர் தாங்கள் மப்டியில் உள்ள போலீஸ் மற்றும் எலக்ஷன் டூட்டியில் உள்ளோம். நீங்கள் நகை அதிகம் போட்டு இருக்கிறீர்கள்.

நகை அதிகம் அணிந்து செல்வது ஆபத்து என்று கூறி கழற்றி கொடுங்கள் பொட்டலம் கட்டித்தருகிறோம். வீட்டில் சென்று அணிந்து கொள்ளுங்கள் என்று கூறி அந்த பெண்மணியிடம் இருந்து 8 பவுன் நகையை வாங்கி பொட்டலம் கட்டி கொடுத்து உள்ளனர்.

வீட்டிற்கு சென்று பார்த்தபோது பொட்டலத்தில் கல்லும், மண்ணும் இருந்துள்ளது. நகை இல்லை. 8 பவுனும் அபேஸ் செய்யப்பட்டது தெரிய வந்தது. இது தொடர்பான புகாரின் பேரில் அண்ணாநகர் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

கேரளாவை சேர்ந்தவர் சலீம் (வயது 35) சென்னைக்கு அலுவல் வேலையாக வந்தவர் பாரிமுனையில் உள்ள ஒரு லாட்ஜில் அறை எடுத்து தங்கியுள்ளார். நேற்று இவர் இல்லாத நேரத்தில் யாரோ மர்ம ஆசாமிகள் அறையினுள் நுழைந்து அவர் வைத்திருந்த 50 ஆயிரம் ரூபாய் ரொக்கப் பணத்தை திருடிச் சென்று விட்டனர். இது தொடர்பான புகாரின் பேரில் வடக்கு கடற்கரை போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
| |

மற்றவை :