.
 
 
 
 
 
 

பிரபாகரன் மகன் படுகாயம்

.

Thursday, 02 April, 2009   11:44 AM
.
கொழும்பு, ஏப்.1: இலங்கையின் புதுக்குடியிருப்பு பகுதியில் ராணுவத்திற்கும், விடுதலைப்புலிகளுக்கும் இடையே நடந்து வரும் கடும் சண்டையில் விடுதலைப்புலிகளின் தலைவர் பிரபாகரனின் மகன் சார்லஸ் அந்தோணி படுகாயமடைந்திருப்ப தாக ராணுவ அதிகாரிகள் தெரிவித் துள்ளனர்.
.
இலங்கையில் புதுக்குடியிருப்பு பகுதியில் புலிகளுக்கும், ராணுவத்திற்கும் இடையே நடைபெறும் சண்டையில் ஒரு படைப்பிரிவை, பிரபாகரனின் மகன் சார்லஸ் அந்தோணி (வயது 24) தலைமையேற்று நடத்தி வந்ததாகவும், கடந்த மாதம் 8-ந் தேதி நடந்த சண்டையின் போது அவர் படுகாயமடைந்ததாகவும் தெரிய வந்துள்ளது என இலங்கை பாதுகாப்பு அமைச்சக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். இந்த சண்டையின் போது, கைது செய்யப்பட்ட புலிகளின் தற்கொலைப் படை பிரிவை சேர்ந்த ஒருவர் இந்த தகவலை ராணுவத்திடம் தெரிவித்ததாக அந்த அதிகாரிகள் கூறினார்கள்.

புலிகளின் தளபதிகளான பானு, லஷ்மணன் ஆகிய இரண்டு பேருடன் சார்லஸ் அந்தோணியும் தலைமையேற்று சண்டையில் ஈடுபட்டிருந்த போது குண்டடிபட்டதாகவும் படுகாயமடைந்த அவர் பாதுகாப்பு வளைய பகுதியில் இருந்த மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டதாகவும் அவர் கூறியதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.

தற்போது பிரபாகரனின் டாக்டரின் மருத்துவ கண்காணிப்பில் சார்லஸ் அந்தோணி இருப்பதாக கனடாவில் வசித்து வரும் புலிகளின் ஆதரவாளர் ஒருவருக்கு இ-மெயில் மூலம் தகவல் வந்த தகவலில் கூறப்பட்டுள்ளது. அந்த முக்கிய நபர் பிரபாகரனின் மனைவி மதிவதனியின் உறவினர் என்றும்,  புலிகளுக்கு கனடாவில் அவர் நிதி திரட்டுபவராக இருந்து வருவதாகவும் அந்த செய்தி கூறுகிறது.

பிரபாகரனின் மூத்த மகன்தான் சார்லஸ் அந்தோணி என்றும், அவரது மகள் துவாரகா, இளைய மகன் பாலச்சந்திரன் ஆகியோர் எங்கு இருக்கிறார்கள் என்பது தெரியவில்லை என்றும் அந்த தகவல் கூறுகிறது.

சார்லஸ் அந்தோணி விமானவியல் பொறியியல் துறையில் பட்டம் பெற்றவர் என்றும், புலிகளின் விமான பிரிவு மற்றும் கணினி பிரிவுக்கு அவர் தலைமையேற்றுள்ளதாகவும் செய்திகள் தெரிவிக்கின்றன.
| |

?????? :