Advertisements




 
 
 
 
 
 

அஞ்சலி அறிவிப்பு

.

Thursday, 02 April, 2009   11:09 AM
.

மும்பை, ஏப்.1: மும்பை தீவிரவாத தாக்குதலில் சிக்கிய பாகிஸ்தான் தீவிரவாதி அஜ்மல் கசாப் சார்பில் ஆஜராவேன் என்று மும்பை வழக்கறிஞர் அஞ்சலி வாக்மோர் கூறியுள்ளார்.

.
மும்பையில் நடைபெற்ற தீவிரவாத தாக்குதலில் பிடிபட்ட அஜ்மல் மீது குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டுள்ளது.  இந்த வழக்கில் அஜ்மல் சார்பில் ஆஜராக எந்த வழக்கறிஞரும் முன்வரவில்லை.

இந்நிலையில் சட்ட உதவி மையத்தைச் சேர்ந்த வழக்கறிஞர் அஞ்சலி வாக்மோர், அஜ்மலுக்காக வாதாட நியமிக்கப்பட்டார்.

எனினும் இதற்கு எதிர்ப்பு தெரிவித்து சிவசேனா கட்சியினர் ஆர்ப்பாட்டம் நடத்தினர். இதனால் அவர் பின்வாங்கினார். இந்நிலையில் இந்த வழக்கில் அஜ்மல் சார்பில் ஆஜராகி வாதாடுவேன் என்று அவர் இன்று தெரிவித்துள்ளார்.
| |

மற்றவை :