.
 
 
 
 
 
 

1 சதுர கிமீ-ல் புலிகள் முடக்கம்

.

Saturday, 28 March, 2009   11:23 AM
.
கொழும்பு/சிங்கப்பூர், மார்ச் 28: விடுதலைப்புலிகள் தற்போது ஒரே ஒரு சதுர கிலோ மீட்டர் பரப்புக்குள் முடக்கப்பட்டுவிட்டதாக இலங்கை அமைச்சரும், பாதுகாப்புத்துறை செய்தி தொடர்பாளருமான கெகலிய ரெம்புக்வெலா தெரிவித்துள்ளார்.
.
இலங்கையின் வட பகுதியில் ராணுவம் நடத்தி வரும் கடும் தாக்குதல்கள் காரணமாக புலிகளின் கட்டுப்பாட்டில் இருந்த பெரும்பாலான பகுதிகள் அவர்களிட மிருந்து கைப்பற்றப்பட்டுவிட்டதாக அரசு தரப்பில் அறிவிக்கப்பட்டுள்ளது.
இந்த நிலையில் பாதுகாப்பு வளைய பகுதியான 20 சதுர கிலோ மீட்டர் பரப்பு நீங்கலாக தற்போது ஒரேயொரு சதுர கிலோ மீட்டர் பரப்புக்குள் விடுதலைப்புலிகள் முடக்கப்பட்டு விட்டதாக இலங்கை அமைச்சரும், பாதுகாப்புத்துறை செய்தி தொடர்பாளருமான கெகலிய ரெம்புக்வெலா தெரிவித்துள்ளார்.

இதனிடையே, இலங்கை வெளியுறவுத்துறை அமைச்சர் ரோகித போகலகாமா, விடுதலைப் புலிகளுக்கு எதிராக ராணுவம் கடும் போர் நடத்தி வரும் நிலையில்  இந்தியா தங்களுக்கு முழு அளவில் உதவி செய்து வருவதாக தெரிவித்துள்ளார்.
போர் காரணமாக எழுந்துள்ள மனித அவல பிரச்சனைகளுக்கு தீர்வு காண தேவையான நடவடிக்கைகளை இலங்கை அரசு எடுத்து வருவதாகவும்   அவர் கூறியிருக்கிறார்.

விடுதலைப்புலிகளை வெற்றிக் கொள்ள வேண்டுமென்பதற்காக இலங்கை அரசு அவசரப்படவில்லை என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.தாய்லாந்துக்கு சென்றுவிட்டு தாயகம் திரும்பும் வழியில் சிங்கப்பூர் வந்த அவர் தொலைபேசி மூலம் பத்திரிகை ஒன்றுக்கு அளித்த பேட்டியில் இத்தகவலை தெரிவித்தார்.

இந்தியா பல வழியிலும் இலங்கை அரசுக்கு உதவி வருகிறது. போர் முடிந்த பிறகு தமிழர்களுக்கு அதிகாரங்களை பகிர்ந்து அளிப்பதற்கு ஏற்கனவே ராஜீவ்காந்தி வகுத்து கொடுத்த திட்டத்தை அதன் முழு வடிவில் செயல்படுத்த உள்ளோம் என்றும் அவர் கூறினார்.

இதனிடையே, விடுதலைப் புலிகளின் பிடியில் இருந்த 2108 தமிழர்கள் அவர்களுடைய கட்டுப்பாட்டு பகுதியிலிருந்து வெளியேறி அரசு கட்டுப்பாட்டு பகுதிக்குள் வந்து தஞ்சமடைந்ததாக இலங்கை பாதுகாப்பு துறை அமைச்சகம் கூறியுள்ளது.
| |

?????? :