Advertisements




 
 
 
 
 
 

செக் கொடுத்து மோசடி

.

Friday, 27 March, 2009   10:59 AM
.
சென்னை, மார்ச் 27: ஏலம் எடுத்த சொத்திற்கு செலுத்த வேண்டிய ரூ. 39 கோடிக்கு வங்கி கணக்கில் பணம் இல்லாமல் செக் கொடுத்து மோசடி செய்த மும்பை ஆசாமியை போலீசார் கைது செய்தனர்.
.
இதுகுறித்து போலீஸ் தரப்பில் கூறப்படுவதாவது:-மும்பையை சேர்ந்தவர் அசன் அப்துல் அலி (வயது 40). இவர் சென்னை ஐகோர்ட்டினால் ஏலம் விடப்பட்ட சொத்தை ஏலத்திற்கு எடுத்து இருக்கிறார்.

இதற்காக ரூ. 13 கோடியே 25 லட்சம் வீதம் 3 செக்குகளை ரூ. 39 கோடியே 75 லட்சத்திற்கு சென்னை உயர் நீதிமன்றத்தில் செலுத்தி உள்ளார். ஆனால் அந்த காசோலைகள் கணக்கில் பணம் இல்லாததால் திரும்பி வந்து விட்டன. இதுகுறித்து ஐகோர்ட் பதிவாளர் ஜெனரல் எஸ்பிளனேடு காவல் நிலையத்தில் புகார் கொடுத்தார்.

இந்த புகாரின் பேரில் ஐகோர்ட் போலீஸ் உதவிகமிஷனர் காதர் மொய்தீன் தலைமையில் எஸ்பிளனேடு போலீசார் விசாரணை நடத்தி கணக்கில் பணம் இல்லாமல் ரூ. 39 கோடியே 75 லட்சத்துக்கு வங்கி காசோலை கொடுத்து மோசடி செய்த மும்பையை சேர்ந்த அசன் அப்துல் அலி என்பவரை கைது செய்தனர்.
| |

மற்றவை :