Advertisements




 
 
 
 
 
 

சப்-இன்ஸ்பெக்டர் தற்கொலை

.

Thursday, 19 March, 2009   12:08 PM
.
ஆவடி,மார்க் 19: ஆவடியை அடுத்த பருத்திப்பட்டில் உள்ள ஸ்ரீராம் நகரை சேர்ந்த கணேஷ் (வயது 36) என்ற சப்-இன்ஸ்பெக்டர்  நேற்று இரவு தூக்கு போட்டு தற்கொலை செய்து கொண்டார்.
.
இவர்  கொரட்டூர் காவல் நிலையத்தில் சப்-இன்ஸ்பெக்டராக பணியாற்றி வந்தார். இதற்கு முன்பு சாத்தாங்காடு காவல் நிலையத்தில் சப்-இன்ஸ்பெக்டராக பணியாற்றி வந்த இவர், கொரட்டூர் காவல் நிலையத்திலிருந்து வேறு இடத்திற்கு பணிமாறுதல் கோரி வந்ததாக கூறப்படுகிறது.

அது கிடைக்காததால் மனமுடைந்து காணப்பட்ட இவர் அதன் காரணமாக தற்கொலை செய்துகொண்டதாக கூறப்படுகிறது. இது குறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
| |

மற்றவை :