.
 
 
 
 
 
 

65 அப்பாவி தமிழர்கள் படுகொலை

.

Sunday, 15 March, 2009   02:02 PM
.
கொழும்பு, மார்ச் 15: இலங்கையில் ராணுவம் நடத்திய கொடூரத் தாக்குதலில் 65 அப்பாவி தமிழர்கள் படுகொலை செய்யப்பட்டனர்.
.

இலங்கையில் புலிகளுக்கு எதிராக ராணுவம் முப்படைகளையும் கொண்டு கடும் தாக்குதல்களை நடத்தி வருகிறது. இதனால் முல்லைத்தீவு மாவட்டத்தில் கடுமையான போர் நடைபெற்று வருகிறது. இந்தப் போரில் அப்பாவி தமிழர்களும் பலியாகி வருவது தொடர்கதையாகி விட்டது.

இந்த நிலையில் வன்னிப் பகுதியில் இலங்கை அரசு அறிவித்த "மக்கள் பாதுகாப்பு வளையம்' மீது இரண்டு நாட்கள் நடந்த கொடூர எறிகணைத் தாக்குதல்களில் 65 தமிழர்கள் படுகொலை செய்யப்பட்டுள்ளதுடன் 79 பேர் காயமடைந்துள்ளனர் என்று விடுதலைப்புலிகள் தெரிவித் துள்ளனர்.

"மக்கள் பாதுகாப்பு வளையம்' என இலங்கை அரசால் அறிவிக்கப்பட்ட மாத்தளன், அம்பலவன் பொக்கணை மற்றும் முள்ளிவாய்க்கால் பகுதிகள் மீது நேற்று இலங்கைப் படையினர் ஆட்லெறி எறிகணை, பல்குழல் வெடிகணை, மோட்டார் மற்றும் பீரங்கித் தாக்குதல்களை நடத்தியதாக அவர்கள் ஆதரவு இணைய தளம் கூறியுள்ளது.

முறியடிப்பு
இதனிடையே முல்லைத்தீவு மாவட்டத்தில் உள்ள புதுக்குடியிருப்பு பகுதியில் நேற்று இலங்கை படையினர்  மேற்கொண்ட தாக்குத லுக்கு எதிராக விடுதலைப்புலிகள் கடும் தாக்குதல் நடத்தினர். இதில் இலங்கை ராணுவத்துக்கு பலத்த இழப்பு ஏற்படுத்தப்பட்டதாக புலிகள் தெரிவித்தனர்.

புதுக்குடியிருப்பு கிழக்கு வீதியில் உள்ள பொன்னம்பலம் மருத்துவமனை பகுதியில் நேற்று இலங்கை படையினர் தாக்குதல் நடத்தினர். இதற்கு எதிராக பதில் தாக்குதலை நடத்தி படையினரின் நகர்வினை முறியடித்ததாக புலிகள் தெரிவித்தனர்.
இப்பகுதியில் கடந்த சில நாட்களாக இலங்கை படையினர் தொடர்ந்து மேற்கொண்டு வரும் முன்நகர்வு முயற்சிகளுக்கு எதிராக விடுதலைப் புலிகள்   தொடர்ந்து கடும் எதிர்த் தாக்குதல்களை நடத்தி வருகின்றனர்.
| |

?????? :