தலைவர்களோடு ஒபாமா பேச்சு |
||
. |
||
Saturday, 14 March, 2009 11:59 AM
|
||
| . | ||
வாஷிங்டன், மார்ச் 14: சவூதி அரேபியா, இந்தோனேஷியா மற்றும் பிலிப்பைன்ஸ் ஆகிய நாட்டு தலைவர்களோடு அமெரிக்க அதிபர் பாரக் ஒபாமா தொலைபேசி மூலம் பேச்சு நடத்தி உள்ளார். ஜி-20 என்று கூறப்படும் முன்னணி பொருளாதார நாடுகள் குழுவில் இவை இடம் பெற்றுள்ளன. |
||
| . | ||
இந்நிலையில் இன்று காலை அமெரிக்க அதிபர் ஒபாமா இந்த நாடுகளின் தலைவர்களை தொலைபேசியில் அழைத்து பேசியுள்ளார். உலகை உலுக்கும் பொருளாதார நெருக்கடி குறித்தும் இவற்றை சமாளிப்பதற்கான வழிகள் குறித்தும் ஒபாமா இந்நாட்டு தலைவர்களோடு ஆலோசனை நடத்தினார். பொருளாதார நெருக்கடியை தீர்க்க சர்வதேச நாடுகளின் ஒத்துழைப்பு அவசியம் என்று ஒபாமா அப்போது வலியுறுத்தினார். |
||
![]() |
||
மற்றவை : |
||
|
|
||























