.
 
 
 
 
 
 

பாண்டு நாயகியாக இந்திய நடிகை

.

Saturday, 14 March, 2009   11:04 AM
.
மும்பை, மார்ச் 14: ஜேம்ஸ் பாண்டு படத்தில் கதாநாயகியாக நடிக்கும் வாய்ப்பு இந்திய நடிகை பிரிடா பின்டோவுக்கு கிடைக்க உள்ளது. ஜேம்ஸ் பாண்டு படம் ரசிகர்கள் மத்தியில் அதிக எதிர்பார்ப்பை ஏற்படுத்துவது போலவே அந்த படத்தில் நாயகியாக நடிக்கப் போவது யார் எனும் கேள்வியில் பரவலான எதிர்பார்ப்பை ஏற்படுத்தும்.
.
ஜேம்ஸ் பாண்டு படத்தில் நாயகியாக நடிப்பது மிகப் பெரிய வாய்ப்பாக கருதப்படுகிறது. பாண்டுக்கு ஜோடியாக நடித்தவர்கள் பெரும் புகழ் பெற்றிருக்கின்றனர். இந்நிலையில் புதிய ஜேம்ஸ் பாண்டு படத்தில் நாயகன் டேனியல் கிரேகிற்கு ஜோடியாக நடிக்கும் வாய்ப்பு இந்திய நடிகை பிரிடா பின்டோவுக்கு கிடைக்க உள்ளது.

மும்பையில் பிறந்து வளர்ந்த பிரிடா ஆஸ்கர் விருதுகளை அள்ளிக் குவித்த ஸ்லம்டாக் மில்லினர் படத்தை லத்திகா பாத்திரத்தில் நடித்து புகழ் பெற்றார். இவரை ஜேம்ஸ் பாண்டு புதிய படத்திற்காக அதன் தயாரிப்பாளர்கள் தேர்வு செய்திருப்பதாக கூறப்படுகிறது. பிரிடாவிடம் மேக்கப் சோதனை நடத்தப்பட்டிருப்பதாக தெரிகிறது.

மேலும் இந்த படத்தை ஸ்லம்டாக் மில்லினர் இயக்குனர் டேனி பாயல் இயக்க இருப்பதால் பிரிடா நாயகியாக தேர்ந்தெடுக்கப்படும் வாய்ப்பு அதிகம் இருப்பதாக கூறப்படுகிறது. குவாண்டம் ஆப் சோலஸ் படத்தின் போதே பிரிடா நாயகி வேடத்திற்காக பரிசீலிக்கப்பட்டதாகவும், ஆனால் அப்போது அவர் மிகவும் இளம் வயது கொண்டவராக இருந்ததால் தேர்வு செய்யப்படவில்லை என்றும் தெரிகிறது.

தற்போது பிரிடா ஹாலிவுட்டில் புகழ் பெற்ற நடிகையாக வளர்ந்து வருகிறார். மேலும் பேஷன் அரங்கிலும் அவருக்கு நல்ல செல்வாக்கு இருக்கிறது. எனவே அவர் ஜேம்ஸ் பாண்டு படத்தில் கதாநாயகியாக நடிக்க தேர்வு செய்யப்படுவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
| |

?????? :