Advertisements




 
 
 
 
 
 

லாரி மோதி 2 பேர் சாவு

.

Friday, 13 March, 2009   11:56 AM
.
விழுப்புரம், மார்ச் 13: விழுப்புரம் அருகே இன்று அதிகாலை 2 லாரிகள் மோதிக் கொண்டு விபத்துக்குள்ளானதில் 2 பேர் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தனர்.
.
இந்த கோர விபத்து குறித்து போலீஸ் தரப்பில் கூறப்படுவதாவது:- விழுப்புரம்- உளுந்தூர்பேட்டை தேசிய நெடுஞ்சாலையில் இன்று அதிகாலை 5 மணியளவில் மடப்பட்டு அருகே உள்ள சித்தாநாங்கூர் என்ற இடத்தில் சென்னையிலிருந்து திருச்சி நோக்கி இரும்பு ஏற்றிச் சென்ற கண்டெய்னர் லாரி ஒன்று சென்று கொண்டிருந்தது.

அப்போது திடீரென அந்த லாரியை டிரைவர் பிரேக் போட்டு நிறுத்தினார். இதனால் சென்னையில் இருந்து கரூர் நோக்கி சென்ற இரும்பு பைப் ஏற்றிய லாரி கண்டெய்னர் லாரி மீது அசுர வேகத்தில் மோதி விபத்துக் குள்ளானது.

இதில் இரும்பு பைப் லாரியில் இருந்த டிரைவர் பிரபா (வயது 30), கிளீனர் ரஜினி (வயது 45) ஆகிய இருவரும் உடல்நசுங்கி சம்பவ இடத்திலேயே பரிதாபமாக  உயிரிழந்தனர்.

பலியான இருவரும் திருச்சி மாவட்டம் முசிறியைச் சேர்ந்தவர்கள் என்று தெரியவந்துள்ளது. இந்த விபத்து குறித்து திருவெண்ணை நல்லூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
| |

மற்றவை :