Advertisements




 
 
 
 
 
 

மின்சாரம் தாக்கி பெயிண்டர் பலி

.

Thursday, 05 March, 2009   04:18 PM
.
ஆவடி, மார்ச் 5: வீட்டின் வெளிச்சுவரில் சுண்ணாம்பு அடிக்கும் பொழுது  மேலே சென்ற மின்சாரக் கம்பி உராய்ந்ததால் மின்சாரம் தாக்கி பெயிண்டர்  பலியானார்.
.
திருமுல்லைவாயில் சரஸ்வதி நகர் தெருவைச் சேர்ந்தவர் ஸ்டான்லி (வயது 22), பெயிண்டர். இவர் திருமுல்லைவாயில் தென்றல் நகரில் உள்ள ஒரு வீட்டின் வெளிப்புற சுவரில் நேற்று சுண்ணாம்பு அடித்துக் கொண்டிருந்ததாக கூறப்படுகிறது.

அப்பொழுது மேலே சென்ற மின்சாரக் கம்பி ஸ்டான்லி மீது பட்டு  அவர் தூக்கி எறியப்பட்டார். உடனடியாக அவரை கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். ஆனால் செல்லும் வழியிலேயே ஸ்டான்லி பரிதாபமாக இறந்தார்.

இது குறித்து திருமுல்லைவாயில் இன்ஸ்பெக்டர் சிதம்பர பாரதி வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றார்.
| |

மற்றவை :