.
 
 
 
 
 
 

12 தீவிரவாதிகள் கைது

.

Wednesday, 04 March, 2009   01:01 PM
.
லாகூர்,மார்ச் 4: நேற்று லாகூரில் இலங்கை கிரிக்கெட் வீரர்கள் மீது கொலை வெறி தாக்குதல் நடத்திய சம்பவம் தொடர்பாக  தீவிரவாதிகள் என்று சந்தேகிக்கப்படும் சுமார் 12 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். லாகூர் கடாபி ஸ்டேடியத்திற்கு சென்று கொண்டிருந்தபோது இலங்கை கிரிக்கெட் அணி வீரர்கள் சென்ற பஸ் மீது தீவிரவாதிகள் வெடிகுண்டுகளை வீசி ராக்கெட் லாஞ்சர் மூலம் தாக்குதல் நடத்தினார்கள்.
.
இதில் 7 இலங்கை கிரிக்கெட் வீரர்கள் காயமடைந்தார்கள். பாகிஸ்தான் பாதுகாப்பு படையை  சேர்ந்த 8 பேர் உயிரிழந்தார்கள். இந்த தாக்குதலை நடத்தியவர் களை தேடும் பணி தீவிரமாக நடைபெற்றது. இதில் தொடர்புடைய வர்கள் என்று சந்தேகிக்கப்படும் 12 பேரை பாகிஸ்தான் நிர்வாகம் கைது செய்திருக்கிறது.

குல்பர்க் நகரத்தில் விடுதிகள், விருந்தினர் மாளிகைகள் அதிரடி சோதனை நடத்தியபோது அவர்கள் சிக்கினார்கள். ஆனால் முக்கிய குற்றவாளிகள் யாரும் சிக்கவில்லை என்று கூறப்படுகிறது.

இதனிடையே இந்த தாக்குதலில் சம்பந்தப்பட்டவர்கள் குறித்து தகவல் கொடுப்பவர்களுக்கு ஒரு கோடி ரூபாய் ரொக்கப் பரிசு அளிக்கப்படும் என்று பஞ்சாப் பிராந்திய அரசு அறிவித்துள்ளது.

இது தொடர்பாக பாகிஸ்தான் பத்திரிகைகளில் விளம்பரங்கள் வெளியிடப்பட்டுள்ளன. இந்த தாக்குதல் தொடர்பாக முக்கிய துப்பு கிடைத்திருப்பதாக பஞ்சாப் மாநில கவர்னர் சல்மான் தஷீர் கூறியிருக்கிறார்.
| |

?????? :