.
 
 
 
 
 
 

இந்தியா கோரிக்கை நிராகரிப்பு

.

Monday, 02 March, 2009   02:53 PM
.

கொழும்பு, மார்ச் 2: விடுதலைப்புலிகளுடனான போரை நிறுத்த வேண்டும் என்ற இந்தியாவின் கோரிக்கையை இலங்கை அரசு நிராகரித்து விட்டது.

 

.
இது பற்றி இந்தியாவிடம் இருந்து தங்களுக்கு முறைப்படியான தகவல் எதுவும் கிடைக்கவில்லை என்று தெரிவித்துள்ள இலங்கை அரசு,  விடுதலைப்புலிகள் ஆயுதங்களை கீழே போட்டால் போர் உடனடியாக முடிவுக்கு வந்துவிடும் என்று தெரிவித்துள்ளது.

விடுதலைப்புலிகள் அறிவித்துள்ள போர் நிறுத்தத்தை ஏற்று இலங்கை அரசும் அவர்களுக்கு எதிரான போரை நிறுத்தி போரில் சிக்கியிருக்கும் அப்பாவி பொதுமக்களை காப்பதற்கான நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும் என்று இந்திய வெளியுறவுத்துறை அமைச்சர் பிரணாப் முகர்ஜி இலங்கை அரசை மீண்டும் வலியுறுத்தி இருந்தார்.

ஆனால் இந்தியாவின் இந்த கோரிக்கையை இலங்கை அரசு அடியோடு நிராகரித்து விட்டது. விடுதலைப்புலிகள் ஆயுதங்களை கீழே போட்டால் போர் உடனடியாக முடிவுக்கு வந்துவிடும் என்று அது தெரிவித்துள்ளது.

அத்துடன் இந்தியாவின் இந்த கோரிக்கை குறித்து தங்களுக்கு முறைப்படியான தகவல் எதுவும் புதுடெல்லியிலிருந்து கிடைக்க வில்லை என்றும் இலங்கை அரசு கூறியிருக்கிறது.
இது பற்றி இலங்கை வெளியுறவுத் துறை செயலாளர் பலித்த கோகனா கூறுகையில், "இந்தியாவிடம் இருந்து எங்களுக்கு எந்த தகவலும் வரவில்லை. விடுதலைப்புலிகள் ஆயுதங்களை கீழே போட்டால் சண்டை எதுவும் இருக்காது என்பதே எங்களுடைய நிலைப்பாடு' என்று தெரிவித்துள்ளார்.

போர் நிறுத்தம் செய்ய இலங்கை அரசுக்கு பிரணாப் முகர்ஜி விடுத்த  கோரிக்கை குறித்து கேட்கப்பட்டதற்கு பலித்த கோகனா இவ்வாறு பதிலளித்துள்ளார்.

"விடுதலைப்புலிகள் போர் நிறுத்தம் அறிவித்திருப்பதாக செய்திகள் வெளியாகி உள்ளன. ஆயுதங்களை கீழே போடுவது குறித்து புலிகள் எதுவும் அறிவிக்காவிட்டாலும், இந்த வாய்ப்பை பயன்படுத்தி இலங்கை அரசு புலிகளுடனான போரை நிறுத்த வேண்டும் என்பதே எங்களுடைய கருத்து' என்று பிரணாப் முகர்ஜி  நேற்று முன்தினம் புதுடெல்லியில் கூறியிருந்தார்.

 அத்துடன் போரில் சிக்கியுள்ள அப்பாவி தமிழ் மக்கள் நிலை குறித்து ஆழ்ந்த கவலை வெளியிட்ட முகர்ஜி அவர்களை பாதுகாப்பதற்கான அனைத்து நடவடிக்கைகளையும் இலங்கை அரசு மேற்கொள்ள வேண்டும் என்றும் பிரணாப் தெரிவித்திருந்தார்.
| |

?????? :