Advertisements




 
 
 
 
 
 

அமெரிக்கா வலியுறுத்தல்

.

Tuesday, 24 February, 2009   11:43 AM
.

வாஷிங்டன், பிப்.24: இலங்கையில் அப்பாவி பொதுமக்கள் மீது தாக்குதல் நடத்தப் படுவதற்கு ஆழ்ந்த கவலை வெளியிட்டுள்ள அமெரிக்கா, இதற்கு முற்றுப்புள்ளி வைக்க இலங்கை அரசும், விடுதலைப்புலி களும் பேச்சுவார்த்தை நடத்த வேண்டும் என்று வலியுறுத்தி யுள்ளது.

.
இலங்கையின் வடபகுதியில் நடைபெற்று வரும் கடுமையான போரில் அப்பாவி தமிழர்கள் அன்றாடம் படுகொலை செய்யப்பட்டு வருகின்றனர். இதற்கு ஐக்கிய நாடுகள் சபை மற்றும் பல்வேறு உலக நாடுகள் ஆழ்ந்த கவலை வெளியிட்டுள்ளன.
இதேபோல அமெரிக்காவும் போரில் அப்பாவி பொதுமக்கள் கொல்லப்படு வதற்கு மிகுந்த வேதனை வெளியிட்டுள்ளது. இது பற்றி அந்த நாட்டின் வெளியுறவுத்துறை அதிகாரி ராபர்ட் உட் கூறுகையில், “அப்பாவி மக்கள் மீது நடத்தப்படும் தாக்குதலை உடனடியாக நிறுத்துவதற்கு இலங்கை அரசும், விடுதலைப்புலி களும் பேச்சுவார்த்தை நடத்த வேண்டும்” என்று தெரிவித்தார்.

இலங்கையில் நிலவும் மனித அவல நிலை தான் எங்களுடைய முக்கியமான கவலையாகும். போர் காரணமாக உள்நாட்டிலேயே இடம் பெயர்ந்த மக்களின் நிலைமை எங்களை மிகவும் கவலை அடையச் செய்துள்ளது. மோதல்களில் சிக்கிக் கொள்ளும் அப்பாவி மக்கள் குறித்து நாங்கள் மிகவும் கவலைப்படு கிறோம். இதற்கு உடனடியாக முற்றுப்புள்ளி வைக்கப்பட வேண்டும்.

தமிழர் இனப்பிரச்சனைக்கு  ராணுவ ரீதியாக முடிவு காணப்பட முடியாது. இதற்கு அரசியல் ரீதியாகவே தீர்வு காணப்பட வேண்டும் என்றும் ராபர்ட் உட் கூறினார்.

 விடுதலைப்புலிகளுக்கும், இலங்கை அரசாங்கத்துக்கும் இடையே பேச்சுவார்த்தை நடத்தப் படுவதற்கு அமெரிக்கா சமரச முயற்சியில் ஈடுபடுமா? என்ற கேள்விக்கு பதிலளித்த ராபர்ட் உட், நாங்கள் அந்தப் பணிக்காக கோரப்பட வில்லை.  அதே சமயம் இலங்கையில் போரை முடிவுக்கு கொண்டுவருவ தற்கான அனைத்து உதவிகளையும் அமெரிக்கா செய்யும். போரை நிறுத்தி அரசியல் தீர்வு காண்பதற்கான பணிகளை  இலங்கை அரசும், விடுதலைப்புலிகளும் தான் மேற்கொள்ள வேண்டும் என்றார்.
| |

மற்றவை :