Advertisements




 
 
 
 
 
 

பெண் தூக்கிட்டு தற்கொலை

.

Sunday, 15 February, 2009   12:01 PM
.
சென்னை, பிப்.15: வரதட்சணை கொடுமை காரணமாக மதுரவாயலில் நேற்று பெண் ஒருவர் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார்.
.
மதுரவாயல் பெருமாள் கோயில் தெருவைச் சேர்ந்த மகேஷ் என்பவரின் மனைவி ஜெயபிரபாவதி (வயது 28). இவர்களுக்கு நான்கு வருடங்களுக்கு முன்பு திருமணமாகி ஒரு பெண் குழந்தை உள்ளது.

இந்த நிலையில், ஜெயபிரபாவதி நேற்று வீட்டில் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார். தகவல் அறிந்ததும் மதுரவாயல் போலீசார் வழக்குப்பதிவு செய்து ஜெயபிரபாவதியின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக கீழ்பாக்கம்
அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

இதனிடையே, ஜெயபிரபாவதியின் தாயார் தனது மகள் தற்கொலை செய்து கொண்டதற்கு வரதட்சணை கொடுமை தான் காரணம் என்று போலீசில் புகார் செய்து உள்ளார். எனவே இதுகுறித்து ஆர்டிஓ விசாரணைக்கும் உத்தரவிடப் பட்டுள்ளது.
| |

மற்றவை :