5 ஆயிரம் பேர் இடம் பெயர்ந்தனர் |
|||
. |
|||
Monday, 09 February, 2009 11:32 AM
|
|||
| . | |||
கொழும்பு, பிப்.9: இலங்கையில் சண்டை நடந்து கொண்டிருக்கும் புதுக்குடியிருப்பு பகுதியில் இருந்து மேலும் 4500க்கும் மேற்பட்ட அப்பாவி தமிழர்கள் புலிகளிடம் இருந்து தப்பி பாதுகாப்பான இடங்களுக்கு வந்துள்ளதாக இலங்கை ராணுவம் தெரிவித்துள்ளது. |
|||
| . | |||
இலங்கையில் முல்லைத்தீவு மாவட்டத்தில் ராணுவத்திற்கும் புலிகளுக்கும் இடையே கடும் சண்டை நடந்து வருகிறது. கடந்த ஒரு வாரமாக புலிகளின் கட்டுப்பாட்டில் இருந்து சுமார் 10 ஆயிரம் பேர் பாதுகாப்பான முகாம்களுக்கு வந்துள்ளதாக ராணுவம் தெரிவித்துள்ளது. இந்த நிலையில், புலிகள் இடம் இருந்து ராணுவம் கைப்பற்றியுள்ள புதுக்குடியிருப்பு பகுதிக்கு, புலிகளின் கட்டுப்பாட்டில் இருந்து தப்பி மேலும் 4700 அப்பாவி தமிழர்கள் இடம் பெயர்ந்து வந்துள்ளதாக ராணுவத்தின் செய்தி தொடர்பாளர் கூறியுள்ளார். அவ்வாறு வந்தவர்கள் நல மையங்களில் தங்க வைக்கப்பட்டு அவர்களுக்கு மருத்துவ வசதிகளும், உணவும் வழங்கப்பட்டுள்ளதாக அவர் தெரிவித்துள்ளார். இதற்கிடையே இலங்கை விமானப்படையில் மிக் 27 ரக ஜெட் போர் விமானங்கள் விடுதலைப் புலிகளின் கடற்புலிகள் முகாமின் மீது இன்று காலை தாக்குதல் நடத்தியது. முல்லைத்தீவின் வடக்கு பகுதியில் காலை 7 மணியளவில் இந்த தாக்குதல் நடந்ததாக விமானப் படையின் செய்தி தொடர்பாளர் ஜனக நாணயகாரா கூறியுள்ளார். வெள்ளமுள்ளவிக்கால் என்னும் அந்த பகுதியில் அமைந்திருக்கும் புலிகளின் கடற்படை தளத்தில் ஏராளமான படகுகளும், இழுவை படகுகளும், இரட்டை டிராக்டர்களும் இருந்ததாக செய்தி தொடர்பாளர் மேலும் தெரிவித்துள்ளார். |
|||
![]() |
|||
மற்றவை : |
|||
|
|
|||























